கிளாமர்.. படுக்கையறை காட்சிகள்.. கொஞ்சம் மிரட்டல்.. டிக்டாக் இலக்கியாவின் நீ சுடத்தான் வந்தீயா?
சென்னை: படுக்கையறை காட்சிகள் ஏகப்பட்ட கிளாமர் என டிக்டாக் இலக்கியா நடித்துள்ள நீ சுடத்தான் வந்தீயா படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.
Recommended Video
டிக்டாக் மூலம் பெரும் பிரபலமானவர் இலக்கியா. அரைகுறை உடையில் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார்.
இந்நிலையில் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார் டிக்டாக் இலக்கியா. ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'.

முக்கிய கதாப்பாத்திரம்
இத்திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார். மேலும் விஜய் டிவி தங்கதுரை, கொட்டாச்சி, நெல்லை சிவா உள்ளிட்ட பல இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

என் கனவு
இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இலக்கியா, இந்த மேடை தனது கனவு மேடை என்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் தனது கனவு எறும் கூறினார்.

ட்ரெயிலர் ரிலீஸ்
மேலும் நடிக்க வந்த பிறகுதான் அதில் உள்ள சிரமம் தெரிந்தது என்றும் கூறினார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் செம கிளாமர் காட்டியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

அடல்ட் ஹாரர்..
ஏராளமான படுக்கையறை காட்சிகள், பிகினி என அடல்ட் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் உள்ளது நீ சுடத்தான் வந்தீயா ட்ரெயிலர். அடல்ட் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications