எல்லா எலும்பையும் எண்ணிடலாம் போல.. கொஞ்சமாச்சும் சாப்பிடும்மா.. இன்ஸ்டா மாடலுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஹாட் மாடல் அழகியாக இன்ஸ்டாகிராமில் வலம் வரும் சாரா சஃபாரி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர்.

ஃபிட்னஸ் ஃப்ரீக்கான சாரா சஃபாரி ஜிம் டிரெய்னராக வலம் வந்தாலும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களையும் வொர்க்கவுட் வீடியோக்களையும் பதிவிட்டு 1.8 மில்லியன் ஃபாலோயர்களை ரசிகர்களாக கொண்டுள்ளார்.

Tik Tok star Sara Safari latest bone show photos gets trolled

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உடம்பில் உள்ள அத்தனை எலும்பும் அப்படியே தெளிவாகத் தெரிகிறதே என கலாய்த்து வருகின்றனர்.

21 வயசு இளம் மாடல்: அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளம் மாடல் அழகியான சாரா சஃபாரி ஜிம் டிரெய்னராக வலம் வருகிறார். 18 லட்சம் ரசிகர்களை கொண்டு இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் இருந்து வரும் சாரா வெளியிடும் வொர்க்கவுட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்துமே இளம் ரசிகர்களை ஜிம்முக்கு செல்லத் தூண்டும் வகையில் உள்ளன.

டிக்டாக் பிரபலம்: இன்ஸ்டாகிராமை தாண்டி டிக்டாக் மூலமாகத்தான் சாரா அதிரடியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சிக்ஸ் பேக் வைத்த தனது உடம்பை டாப்ஸை ஓரளவுக்கு உயர்த்திக் காட்டி கிக்கேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தின் அனலை அதிரடியாக கூட்டி இளைஞர்கள் நெஞ்சில் இடம்பிடித்து விட்டார்.

எல்லா எலும்பும் தெரியுதே: கொஞ்சம் கூட உடம்பில் சதையே இல்லாமல், அப்படியே எலும்புக்கூடே தெரிவது போல சமீபத்தில் சாரா சஃபாரி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து இந்தளவுக்கு எல்லாம் வொர்க்கவுட் செய்ய வேண்டாம் என அட்வைஸ் கூறும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் உள்ளன.

ஒவ்வொரு எலும்பையும் அப்படியே எளிதில் எண்ணி விடலாம் என்றும் கமெண்ட்டுகள் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் குவிந்து வருகின்றன. சுமார் 1.5 லட்சம் ஃபாலோயர்கள் இந்த லேட்டஸ்ட் வொர்க்கவுட் போட்டோக்களுக்கு லைக்கும் செய்துள்ளனர்.

கொஞ்சமாச்சும் சாப்பிடும்மா: சாராவின் ரசிகர்கள் அவர் ஃபுல் டயட்டில் இருந்து தான் இப்படியொரு உடல் தோற்றத்துக்கு வந்திருக்கிறார் என்றும் பைசப்ஸ் எல்லாம் பலமாக இருக்க நெஞ்சு மற்றும் இடுப்பு பகுதியில் கொஞ்சம் கூட சதையே இல்லையே, கொஞ்சமாச்சும் சாப்பிடும்மா இல்லை என்றால் அப்புறம் கஷ்டமாகிடும் என அட்வைஸ் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X