ரா ஏன் ராவெல்லாம் லாங் ஆவுதே..காவாலா பாட்டுக்கு வேறுவிதமா டான்ஸ் ஆடி அசத்திய டிக் டாக் இலக்கியா!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், டிக் டாக் இலக்கியா காவாலா பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ லைக்குகள் குவிந்து வருகிறது.
அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார். வெளியானது முதலே இப்பாடல் ஹிட்டடித்து வருகிறது.

ஜெயிலர்: அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். இத்திரைப்படம் அடுத்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இணையத்தில் படு வைரல்: இதில், காவாலா என்ற பாடல் கடந்த 6ந் தேதி வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே இப்படம் பெரும் வைரலானது. இன்ஸ்டா ரீல்ஸின் இப்போது வரை இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள இப்பாடல் இதுவரை 5.6 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. காவாலா பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் நெகிழ்ந்து போன தமன்னா, இந்த பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது, மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராவெல்லாம் லாங் ஆவுதே: திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், டிக் டாக் செயலி மூலம் பிரபலமான டிக் டாக் இலக்கியா ரா ஏன் ராவெல்லாம் லாங் ஆவுதே..என ஆட்டமா நடனமாடி உள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோவைப் பார்த்த இலக்கியாவின் தீவிர ரசிகர்கள் அட, தமன்னா ஆட்டத்தை இது சூப்பரா இருக்கே என்று அந்த வீடியோவிற்கு கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











