மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த டிக் டாக் இலக்கியா? பப்பில் சரக்கு பாட்டிலுக்கு நடுவே கவர்ச்சி போஸ்!
சென்னை: டிக் டாக் ஆப் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் இலக்கியா, கவர்ச்சி போட்டோக்களை வெளியிடாமல் தனியாக குக்கிங் சேனல் தொடங்கி சமைக்கும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இனிமேல் நோ கவர்ச்சி என்று கூறியிருந்த நிலையில் மீண்டும் பப்பில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
கவர்ச்சி வீடியோக்களை போட்டு பிரபலமான நடிகை இலக்கியா, ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், படவாய்ப்பு தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்து அவரை ஏமாற்றி விட்டதால், சினிமா வேண்டாம் என்று மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களை போட்டு கணிசமான லைக்குகளை பெற்று அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்.

அண்மையில், இலக்கியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நான் எப்போதுமே தனியாகத்தான் இருப்பேன், எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் வருவார்கள் சிறிது நேரம் இருந்துவிட்டு போய்விடுவார்கள். இதனால், பெரும்பாலான நேரம் தனியாகத்தான் இருப்பேன். இதனால், பல விஷயத்தை நினைத்து கவலைப்பட்டு அழுது இருக்கிறேன். ஆனால், நான் கடந்து வந்த வாழ்க்கை பல விஷயத்தை எனக்கு சொல்லி கொடுத்துவிட்டதால், இப்போது எல்லாத்தையும் தாங்கிக் கொள்ளும் மனநிலை எனக்கு வந்துவிட்டது.

குக்கிங் சேனல்: மேலும், ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து இருக்கிறேன், ஆனால், அது தோல்வியாகிவிட்டதால், போதும்டா சாமி இருப்பதை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். இப்போது, ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறேன். இப்போது, புதியதாக குக்கிங் சேனல் தொடங்கி இருக்கிறேன் அதற்கு மக்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனால், இனி கவர்ச்சி காட்டாமல், இப்படியே மாறிவிடலாம் என்று இப்போது கவர்ச்சி வீடியோக்களை போடுவதில்லை. இதற்கும் சில பேர் மோசமான கமெண்ட்டுகளை போடுகின்றனர். என்று கூறி இருந்தார்.

பப்பில் சரக்கு பாட்டிலுடன்: இந்நிலையில் தற்போது இலக்கியா மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் பப்பில் சரக்கு பாட்டிலுக்கு மத்தியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்னம்மா கவர்ச்சிக்கு நோ சொன்னீங்க, ஆனால் இப்போ பப்பில் இருக்கும் போட்டோவை போட்டுஇருக்கிறீர்கள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











