TikTok elakkiya: இன்ஸ்டாகிராம் சில்க்.. டிக் டாக் இலக்கியாவின் குதூகலமான போட்டோஸ்!
சென்னை: டிக் டாக்கில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. அதில், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து எல்லை மீறி தாறுமாறான கிளாமர் காட்டி இளம் ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார் இலக்கியா. டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகும், இன்ஸ்டாகிராம், பேஸ் புக்கில் கவர்ச்சி தரிசனம் கொடுத்து வரும் இலக்கியா தற்போது அட்டகாசமான போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
டிக் டாக்கின் மூலம் பிரபலமான இலக்கியா ஆரம்பத்தில் புடவையை கட்டிக்கொண்டு கவர்ச்சி காட்டாமல் தான் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால், அந்த வீடியோவிற்கு பெரியதாக லைக் வரவில்லை, வருமானமும் வரவில்லை. இதனால், கவர்ச்சியை கையில் எடுத்த இலக்கியா, கவர்ச்சி ஆட்டம் போட ஆரம்பித்தார். சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி நாயகியாக மாறினார். இதனால், பெரிசுகள் முதல் இளசுகள் வரை அனைவரும் இவரின் தீவி ரசிகர்களாக மாறினார்கள். திருமண கட்அவுட்டிலும் இலக்கியாவின் போட்டோவை வைத்து அழகு பார்த்தார்கள் இவரின் தீவிர ரசிகர்கள்.

டிக் டாக் இலக்கியா: இதன் மூலம் பிரபலமான இலக்கியா, இதை வைத்தே சினிமாவில் ஜெயித்துவிடலாம் என்று, ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், படவாய்ப்பு தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்து அவரை ஏமாற்றியதால், சினிமாவே வேண்டாம் என்று மீண்டும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோ மற்றும் போட்டோக்களை போட்டு கணிசமான லைக்குகளை அள்ளி சம்பாதித்து வருகிறார். தற்போது, இலக்கியா குக்கிங் சேனல் ஒன்றை தொடங்கி அதில் சமைக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
மோசமான கமெண்ட்: அதற்கு மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு வருகிறது. மக்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு சமைப்பது என்றால் ரொம்ப பிடிக்கும், 8 வயதில் இருந்து சமையல் செய்து வருகிறேன். இதனால், சமையல் செய்வது என்பது எனக்கு பிடித்தமான விஷயம். இதனால், முன்பு போல கவர்ச்சி வீடியோ, போட்டோக்களை வெளியிடுவது இல்லை. ஆனாலும், சிலர், இனிமே காட்ட மாட்டியா? என்றும் பத்தினியா மாறிட்டியா? சும்மா பத்தினி வேஷம் போடாதே என்றும் கமெண்ட் போடுகிறார்கள் அது வருத்தமாக இருக்கிறது என்று ஷகிலா உடனான பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
இன்ஸ்டாகிராம் சில்க்: இலக்கியா சொன்னது போலவே, தற்போது அவர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதில்லை.அண்மையில் அவர் புடவை கட்டி, நகைகளை போட்டு கல்யாண பெண் போல இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் இலக்கியாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











