ஸ்டண்ட் மாஸ்டர் உடன் என்ன பிரச்சனை.. டிக் டாக் இலக்கியா தற்கொலை செய்ய முடிவெடுத்தாரா?.. உண்மை என்ன?

சென்னை: டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், படவாய்ப்பு அவருக்கு சரியாக அமையவில்லை. மேலும் சிலர் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால், சினிமாவே வேண்டாம் என அதற்கு முழுக்கு போட்டுவிட்டு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வந்தார். தற்போது, இலக்கியா சமையல் செய்து டீசன்டாக வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இலக்கியா நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான். 6 ஆண்டுகளாக நான் அவன் கூடத்தான் இருந்து இருக்கிறேன். அவனுக்கு பல பெண்களுடன் பழக்கம். இருப்பதை பற்றி கேட்டதால், என்னை அடிப்பான். நானும் பொறுத்து பொறுத்து போனேன். இதையும் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என்று ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் போட்டோவை போட்டு பகிர்ந்து இருந்தார். இதனால் இலக்கியாவுக்கு என்ன ஆச்சு என அவரது பாலோவர்கள் பதறிப் போனார்கள்.

tiktok elakkiya dhilip subbarayan
Photo Credit:

டிக் டாக் இலக்கியா: அதைத்தொடர்ந்து, இலக்கியா, அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால், மயக்கம் ஏற்பட்டு போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வரும் இலக்கியா, அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.. இந்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால், அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இலக்கியா தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு ஊட்டச்சத்து மாத்திரையை சாப்பிட்டாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எல்லாமே போலி செய்தி: இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இலக்கியாவிற்கு என்ன ஆச்சு என, அவரது ரசிகர்கள் எல்லாம் கேட்டு வரும் நிலையில், இலக்கியா தனது இன்ஸ்டாகிராமி ஸ்டோரியில், "எல்லாமே போலி செய்தி" என பதிவிட்டுள்ளார். எல்லாமே பொய் என்றால் எதற்காக திலீப் சுப்பராயன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலக்கியா ஸ்டோரி போட்டார், அதற்கான முகாந்திரம் என்ன என அடுக்கடுக்கான கேள்வி எழுந்துள்ளது.

திலீப் சுப்பராயன்: தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டரான சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன் 2016 ஆம் ஆண்டு வெளியான அஞ்சல படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமானார். பின், ஓரம் போ படத்தில் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி என்பவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு தான், "ஆரண்ய காண்டம்" படத்தில் இணை இயக்குநராகவும் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களில் தொடர்ந்து பணியாற்ற வருகிறார். இவர் அரிமா நம்பி, புலி, நானும் ரௌடி தான்,தெறி, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஜில்லா, கோட், தீரன் அதிகாரம் ஒன்னு, வடசென்னை உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அது மட்டுமில்லாமல், இயக்குநர் மாரீசன் இயக்கியிருந்த சங்கு சக்கரம் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X