Elakkiya: என்ன மிரட்டுனாங்க.. ஆதாரம் இருக்கு, நாளைக்கு எல்லா உண்மையும் சொல்றேன்.. இலக்கியா!
சென்னை: கடந்த வாரம் சோசியல் மீடியா முழுக்க பேசு பொருளாக இருந்தது இலக்கியா தற்கொலை முயற்சி விவகாரம் தான். என்னுடைய சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம் என ஒரு பதிவினை போட்டு விட்டு அதை டெலிட் செய்த இலக்கியா, மறுநாள் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் இருந்து மீண்டுள்ள இலக்கியா இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு பதிவினை போட்டு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு பிரபலமானார். இவரின் கவர்ச்சியான ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே இன்ஸ்டாகிராமில், இரண்டு மில்லியன் பாலோவர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு இலக்கிய தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான். 6 ஆண்டுகளாக நான் அவன் கூடத்தான் இருந்து இருக்கிறேன். அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு அதை கேட்டால் என்னை அடிப்பான். நானும் பொறுத்து பொறுத்து போனேன் என்று பதிவிட்டு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் போட்டு இருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலானதும் அதை அவர் டெலிட் செய்தார்.

டிக் டாக் இலக்கியா: அதன் பின் இலக்கியா, அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயன்று நிலையில் போரூ தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ் பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், இலக்கியாவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் காரணம் என்றும், அவர் இலக்கியாவை நம்ப வைத்து ஏமாத்திவிட்டார் என்றும் செய்திகள் பரவியது. அப்போதே இலக்கியாக 'எல்லாமே பொய்யான செய்தி' என பதிவிட்டு இருந்தார்.
என்னிடம் ஆதாரம் இருக்கு: தற்போது உடல் நலம் தேறி இருக்கும் இலக்கியா, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், என்னை மிரட்டித்தான் எல்லாமே பொய்னு போட சொன்னாங்க, நாளைக்கு செய்தியார்களை சந்தித்து என்னிடம் இருக்கும் ஆதாரம் அனைத்தையும் காட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். உண்மையில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனுடன் இலக்கியா உறவில் இருந்தாரா.. அவர் தான் மிரட்டி 'எல்லாம் பொய் என செய்தி' என போட சொன்னாரா என பலவிதமான கேள்வி எழுந்துள்ளது. இதற்கு எல்லாத்திற்கும் நாளை விடை கிடைத்துவிடும் என நம்பப்படுகிறது.
சட்டப்படி சந்திப்பேன்: ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகனான திலீப் சுப்பராயன், இணையத்தில் பரவும் பொய்யான செய்திக்கும், இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை யாரோ செய்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பிரபலமே இது பொய் செய்தி என போட்டு இருக்கிறார். அப்படி இருந்தும் சில ஊடகங்களில் வரும் செய்தி, என்னையும், என் குடும்பத்தையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சந்திப்பேன் என அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











