கவர்ச்சிப் புயல் டிக்டாக் இலக்கியா அடல்ட் காமெடி படத்தில் நடிக்கிறார்.. பேரே பயங்கரமா இருக்கே!

சென்னை: டிக்டாக் பிரபலமான கவர்ச்சிப் புயல் இலக்கியா அடல்ட் காமெடி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

டிக்டாக் செயலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இளம்பெண்கள் இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் இந்த டிக்டாக் செயலியின் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.

திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த செயலியை பயன்படுத்தி வந்தனர். டிக்டாக் மூலம் பல திறமைசாலிகள் திரைத்துறைக்கு கிடைத்துள்ளனர்.

பெரும் கவலை

பெரும் கவலை

அதே நேரத்தில் பலரின் வாழ்க்கையும் இந்த டிக்டாக் செயலியின் மூலம் சீரழிந்துள்ளது. சீன செயலியான இந்த டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் டிக்டாக் பிரபலங்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

கவர்ச்சி வீடியோ

கவர்ச்சி வீடியோ

இந்நிலையில் டிக்டாக் பிரபலங்களில் ஒருவரான இலக்கியாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கவர்ச்சி உடைகள், கவர்ச்சியான நடன வீடியோக்கள், டபுள் மீனிங் டயலாக்குகள் என ஒரு மாதிரியாகவே டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

ஏமாற்றிவிட்டார்கள்

ஏமாற்றிவிட்டார்கள்

அவரது கவர்ச்சியையும் டபுள் மீனிங் டயலாக்குகளையும் பலர் ரசித்த போதும் சிலர் கழுவி ஊற்றி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர்கள் சிலர் தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக கூறினார்.

நீ சுடாம வந்தியா?

நீ சுடாம வந்தியா?

இந்நிலையில் டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘நீ சுடாம வந்தியா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அடல்ட் ஹாரர் காமெடி

அடல்ட் ஹாரர் காமெடி

இந்தப் படத்தில் இலக்கியாவுக்கு ஹீரோவாக விக்கி என்பவர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அடல்ட் ஹாரர் காமெடியாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டதாகவும் பாடல் காட்சிகள் மட்டுமே மிச்சமிருப்பதாக கூறப்படுகிறது.

கவர்ச்சி கதாப்பாத்திரத்தில்

கவர்ச்சி கதாப்பாத்திரத்தில்

லாக்டவுன் முடிந்த பின்னர் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டு விடும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ரைஸா வில்சன் நடிக்கும் ஒரு படத்திலும் இலக்கியா கவர்ச்சி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X