மைக்கேல் ஜாக்சன் ரேன்ஜூக்கு ஆட்டம் போட்ட ஜிபி முத்து… இணையத்தில் வைரலாகும் வீடியோ !

சென்னை : செத்த பயலே... நார பயலே... பேதியில போக போன்ற வார்த்தைகளை பயன்படுத்திய டிக் டாக்கில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜிபி முத்து.

இவருக்கு ஒரு பக்கத்தில் எதிர்ப்பு இருந்தாலும் கல்லாக்கட்டும் அளவுக்கு இவருக்கு பணம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது இவர் என்னா வாழ்க்கடா பாடலுக்காக டான்ஸ் மாஸ்டருடன் ஒத்திகை பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டிக் டாக் ஜிபிமுத்து

டிக் டாக் ஜிபிமுத்து

டிக் டாக் மூலம் நகைச்சுவையான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து, அதன்பின் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் யூடியூபில் பிரபலமடைந்தார். தற்போது டிவி நிகழ்ச்சிகள், யூ டியூப் சேனல்கள் என அழைப்புகள் இவரை வீடு தேடி வருகின்றன. பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் நடிக்கும் திகில் திரைப்படமான ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கலந்து கொள்ளவில்லை

கலந்து கொள்ளவில்லை

ஜிபி முத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டின் முன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் இதையடுத்து, ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வாரா எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளவில்லை என்னால் என் குடும்பத்தையும் செல்போனையும் பிரிந்து இருக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஆல்பம் பாடல்

ஆல்பம் பாடல்

விஜய் டிவி பிரபலங்கள் இணைந்து என்ன வாழ்கடா என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளார். இந்த ஆல்பம் சாங் சமீபத்தில் வெளியானது. இதில் ரக்‌ஷன், சுனிதா, ஸ்வதிஷ்தா,ஜிபி முத்து ஆகியோரின் நடித்திருந்தனர். டாங் லி ஜம்போ இயக்கிய இந்த பாடலுக்கு கணேசன் இசையமைத்திருந்தார். அ.ப.ராஜா இந்த பாடலை எழுதி இருந்தார். பென்னி தயாள் மற்றும் வ்ருஷா இந்த பாடலை பாடி இருந்தனர்.

ஆட்டம் போட்ட ஜிபி முத்து

ஆட்டம் போட்ட ஜிபி முத்து

இந்த நிலையில், இந்த ஆல்பம் பாடலுக்காக ஜிபி முத்து நடன மாஸ்டருடன் ஒத்திகையில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஜி.பி.முத்து கலக்கலான காஸ்ட்யூம் போட்டு கொண்டு, கையையும், இடுப்பையும் மாத்தி மாத்தி சும்மா மைக்கேல் ஜாக்சன் ரேன்ஜூக்கு ஆட்டம் போட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இஷ்டத்திற்கு கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X