பிக்பாஸ் 4ல் அந்த டிக்டாக் நடிகையா.. அப்போ 'அதுக்கு' பஞ்சமே இருக்காது போங்க!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Latest Update • Contestant List

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பீதி மற்றும் லாக்டவுன் காரணமாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்காமல் இருந்தது.

பிக்பாஸ் டீஸர்

பிக்பாஸ் டீஸர்

வழக்கமாக ஜூன் ஜூலை மாதங்களில் தொடங்க வேண்டிய இந்நிகழ்ச்சி இதுவரை தொடங்காமல் இருந்தது ரசிகர்களை சற்று கவலையில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கான டீஸர் வெளியானது.

கமல் தொகுப்பாளர்

கமல் தொகுப்பாளர்

அதன்படி உலக சுகாதார மையம் அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என அறிவித்தார் கமல்ஹாசன். இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 4யும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.

கண்களை விரிக்கும் ரசிகர்கள்

கண்களை விரிக்கும் ரசிகர்கள்

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என ஒரு பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களின் விழிகளை விரிவடைய செய்துள்ளது.

டிக்டாக் இலக்கியா

டிக்டாக் இலக்கியா

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலமான இலக்கிய பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்டாக் பயன்பாட்டில் இருந்த போது கவர்ச்சி உடைகள், கவர்ச்சியான நடன வீடியோக்கள், டபுள் மீனிங் டயலாக்குகள் என ஒரு மாதிரியாகவே வீடியோ வெளியிட்டு வந்தார் இலக்கியா.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

அவரது கவர்ச்சியையும் டபுள் மீனிங் டயலாக்குகளையும் பார்த்த ரசிகர்கள் அவரை இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றினர். ஆனாலும் அவர் காட்டிய கவர்ச்சிக்கு பலனாக இலக்கியாவுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நீ சுடாம வந்தியா

நீ சுடாம வந்தியா

அவருக்கு ஏற்றது போலவே, அடல்ட் காமெடி படமாக உருவாகிறது அவர் நடிக்கும் நீ சுடாம வந்தியா திரைப்படம். இந்நிலையில் இலக்கியாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்ய நிகழ்ச்சிக் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

ஏற்கனவே தினம் தினம் கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு கிறங்கடித்து வரும் ஜெமினி பட நடிகை கிரண் ரத்தோடை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டடு வர பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக வெளியானது.

களைக்கட்டும்

களைக்கட்டும்

இந்நிலையில் இலக்கியாவும் சேர்ந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் களைக்கட்டும் என்கிறார்கள் ரசிகர்கள். எது எப்படியோ முதலில் நிகழ்ச்சியை ஆரம்பியுங்கள் என்றும் ஒரு பக்கம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X