For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரொம்ப அசிங்கமாகிடும்.. ஏற்கனவே ஒருத்தர் பண்ணது போதாதா.. அந்த பிரபலத்தை கழட்டி விட்ட பிக்பாஸ் குழு?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அறிவிப்புகள் வந்த நிலையில், தற்போது திடீரென அந்த பிரபலம் வேண்டாம் என பிக் பாஸ் குழு முடிவு செய்து அவரை துரத்தி அடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  அடுத்த மாதம் தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4க்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

  சமீபத்தில் செம ஸ்டைலாக உலகநாயகன் ஆடிப் பாடி அசற வைத்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டீசர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

  'பிக் பாஸ்ல நீங்க இல்லைன்னு தெரிஞ்சதும் ஏமாந்து போயிட்டோம்..' பிரபல நடிகையிடம் ரசிகர்கள் வருத்தம்! 'பிக் பாஸ்ல நீங்க இல்லைன்னு தெரிஞ்சதும் ஏமாந்து போயிட்டோம்..' பிரபல நடிகையிடம் ரசிகர்கள் வருத்தம்!

  கமல் நடனம்

  கமல் நடனம்

  அந்த டீசருக்கு கடந்த சீசனின் போட்டியாளரும், பிரபல நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் கொரியோகிராஃப் செய்த பிஹைண்ட் தி சீன்ஸ் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கூட்டி சென்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போவதை அறிந்து ஏகப்பட்ட ரசிகர்கள் அதன் ஒளிபரப்பு தினத்துக்காகவும், அதை பற்றிய செய்திகளை அறியவும் ஆவலுடன் உள்ளனர்.

  போட்டா போட்டி

  போட்டா போட்டி

  விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கவுள்ள தகவல் வெளியானதும், போட்டி சேனல்களான சன் டிவி, கலர்ஸ் தமிழ், ஜி தமிழ் உள்ளிட்ட பிரபல சேனல்கள், அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக புதிய நிகழ்ச்சிகளை களமிறக்க திட்டம் தீட்டி வருகின்றன. ஆனால், அதையெல்லாம் பிக் பாஸ் தகர்த்து எறிந்துவிடும் என்பதே ரசிகர்கள் கருத்து.

  புதுப்புது யூடியூப் சேனல்கள்

  புதுப்புது யூடியூப் சேனல்கள்

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கவுள்ளதை மனதில் வைத்துக் கொண்டு, ஏகப்பட்ட புதிய யூடியூப் சேனல்கள் பிசினஸும் களைகட்ட தொடங்கி விட்டன. நம்ம வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரது யூடியூப் சேனல்களிலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் ஹாட் டாப்பிக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  யார் யார்

  யார் யார்

  பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை மீண்டும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதியாகி உள்ளது. பங்கேற்க போகும் போட்டியாளர்கள் என சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. நடிகை கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஷிவானி, டிக்டாக் இலக்கியா, வி.ஜே. சித்ரா, அமுதவாணன், புகழ் உள்ளிட்ட சில பெயர்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், சில யூடியூபர்களும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அதிரடியாக நீக்கம்

  அதிரடியாக நீக்கம்

  இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிக்டாக் இலக்கியா இந்த சீசனில் இடம்பெற்று சர்ச்சைக்கும், கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவரைத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது அதிரடியாக நீக்கி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வட போச்சே..

  என்ன காரணம்

  என்ன காரணம்

  ஏற்கனவே சில சூப்பர் மாடல்களை களமிறக்கி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பெயரும் கெட்டுப் போயுள்ளதாகவும், நிர்வாண கோலத்தில், அலங்கோலமாக போட்டோஷூட் நடத்தி டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு வரும் இலக்கியா, பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகும் அது போன்று, முற்றும் திறந்து காட்டி விட்டால், என்ன ஆவது என்ற பயத்தில் தான் அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்கின்றனர். பசங்க சாபம் சும்மா விடாது பிக் பாஸ்!

  English summary
  Bigg Boss 4 Tamil team rejects TikTok Ilakiya, a latest shocking buzz circulates virally. TikTok Ilakiya fans upset for the unexpected exit.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X