டைம் டிராவலை மையமாகக்கொண்ட.. டைம் என்ன பாஸ்.. நகைச்சுவை வெப் சீரீஸ்!

சென்னை : கவிதாலயா புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாக்கப்பட்ட டைம் என்ன பாஸில் ரோபோ சங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, மாமதி சாரி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர்18-ஆம் தேதி பிரத்தியேகமாக அமேசான் ப்ரைம் வீடியோவில் டைம் என்ன பாஸின் 10-பகுதிகளையும் ஸ்ட்ரீம் செய்யலாம்

15 செப்டம்பர் 2020 - ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சிட்காம் டைம் என்ன பாஸின் டிரெய்லரை அமேசான் பிரத்யேகமாக தனது ஸ்டீரிமிங் தளத்தில் வெளியிட்டது. கவிதாலயா புரொடக்க்ஷன்ஸ் பேனரில் உருவான, இந்த 10 பகுதியும் உங்களை சிரிப்பு கடலில் ஆழ்த்த வருகிறது.

முக்கிய கதாபாத்திரத்தில்

முக்கிய கதாபாத்திரத்தில்

வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த நான்கு பேருடன் தனது அறையை பகிர்ந்து கொள்ளும் ஐ.டி துறையில் பணியாற்றும் நபரைச் சுற்றி கதை நகர்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, மாமதி சாரி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இலகுவான பக்கத்தை

இலகுவான பக்கத்தை

இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 18 முதல் அதிரடி நகைச்சுவையை ஸ்ட்ரீம் செய்யலாம்.டைம் என்ன பாஸின் கதைக்களம் புதிது மற்றும் டைம்-டிராவலை மையமாகக் கொண்டு நகைச்சுவை அமைந்துள்ளது. வாழ்க்கையின் இலகுவான பக்கத்தை நிறைய மகிழ்ச்சி தரும் தருணங்கள் மற்றும் நகைச்சுவையுடன் எடுத்துக்காட்டுகிறது.

 ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த புதிய ப்ராஜெக்டை பற்றி கவிதாலயாவின் எம்.டி புஷ்பா கந்தசாமி கூறும்போது, "இந்த டைம் என்ன பாஸின் கதைக்கரு புதுமையானது, பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டே, ஒரு புத்துணர்ச்சியூட்டும் காலத்தை கடந்து செல்லும் பயணத்திற்கு அழைத்து செல்லும். ஏ.ஆர்.ரஹ்மானுடனான ஹார்மோனிக்குப் பிறகு அமேசான் ப்ரைம் வீடியோவுக்காக மீண்டும் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது-- டைம் என்ன பாஸ் தெற்கில் உள்ள பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் என்று நம்புகிறோம். இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் மக்களை மனதை கொஞ்சம் இலகுவாக்க திரைப்படத்துறையில் முன்னணியில் உள்ள கலைஞர்களை அழைத்து வந்துள்ளோம். இதை நாங்கள் ரசித்து உருவாக்கியது போலவே தமிழ் பார்வையாளர்களும் இதை அனுபவித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்."

சாகசங்களைக்

சாகசங்களைக்

டைம் என்னா பாஸ் என்பது, தற்செயலாக சென்னையில் வந்து மாட்டிக் கொள்ளும் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த நான்கு பேருடன் தனது அப்பார்ட்மெண்டை பகிர்ந்து கொள்ளும் ஒரு சராசரி ஐ.டி. பையன் அன்றாடம் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சாகசங்களைக் எடுத்துக்காட்டும் தமிழ் சிட்காம் காமெடி ஆகும். ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் டைம் என்ன பாஸும் சேருகிறது. ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்பில் ப்ரைம் உறுப்பினர்கள் டைம் என்ன பாஸை எங்கும், எந்த நேரத்திலும் பார்க்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X