என் கதையை மட்டுமல்ல.. என் 3 வருட உழைப்பையும் திருட பார்க்கிறார்கள்.. இயக்குனர் பகீர் புகார்!
சென்னை டைம் இல்ல படத்தின் இயக்குநரான சதீஷ் கர்ணா தனது கதை மட்டுமின்றி தனது உழைப்பையும் திருடப் பார்க்கிறார்கள் என பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
டைம் இல்ல என்ற பெயரில் சதீஷ் கர்ணா என்ற அறிமுக இயக்குனர் புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரித்து அதில் ஹீரோ ஆகவும் நடித்தவர் மனோ பார்த்திபன்.
இந்நிலையில் படத்தின் இயக்குநரான சதீஷ் கர்ணா, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அதாவது தான் படத்தை எடுத்து முடித்து சென்சாரும் செய்து அதற்கான சான்றிதழும் பெற்றுவிட்டதாக கூறியுள்ளார்.

பெயரை திருட முயற்சி
இந்நிலையில் திடீரென தன்னை காரணம் இல்லாமல் படத்திலிருந்து நீக்கி விட்டு தயாரித்து நடித்த மனோ பார்த்திபனே இயக்கியதாக பெயரை போட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மறு சென்சார்
அதோடு தான் நடித்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விட்டு காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து சில காட்சிகளை படமாக்கி சேர்த்திருப்பதாகவும் சதிஷ் கர்ணா கூறியுள்ளார். படம் சென்சார் ஆன பின் மீண்டும் காட்சிகளை சேர்த்து மறு சென்சார் போக திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

படத்தையே திருடுகிறார்கள்
முன்பெல்லாம் கதையை திருடினார்கள் தற்போது கதையோடு கஷ்டபட்டு கனவோடு கதையை படமா இயக்கி கொடுத்த பின் அதை மொத்தமா திருடிக் கொண்டு இயக்குனரை தூக்கி வீசிவிட்டார்கள் என்றும் சதீஷ் கர்ணா தெரிவித்துள்ளார்.

பாலாவையே தூக்கி போடலியா
இதுகுறித்து தயாரிப்பாளரிடம் கேட்டால் இயக்குனர் பாலா ரீமேக் பண்ண படத்திலிருந்து பாலாவையே தூக்கி போடலியா என்று அறிமுக தயாரிப்பாளர் ஹீரோ மனோ பார்த்திபன் விளக்கம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

யார் தடுப்பது?
மேலும் அவருக்கு ஒரு உண்மை புரியல என்ற அவர், பாலாவை தூக்கி போட்ட கம்பேனி அவர் இயக்கிய ஒரு காட்சிய கூட பயன் படுத்தவில்லை. புதுசாதான் படம் எடுக்கிறார்கள். இப்படி அடுத்தவர் அறிவை திருடும் செயலை யார் தடுப்பது என்றும் இயக்குநர் சதீஷ் கர்ணா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications