நேரம் நல்லாத்தான் இருக்கு.. தனுசு ராசி நேயர்களே!

சென்னை: தனுசு ராசி நேயர்களே இப்போ உங்களுக்கு நேரம் நல்லாத்தான் இருக்கு.

"அகநக அகநக அசத்தும் அழகுல இழுக்குற பத்மினியோ" என்ற படம் மூலம் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசையை மீண்டும் நிரூபித்து இருக்குறாரு. ஹரீஷ் கல்யாண் நடித்து,வரும் 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 time is good for Dhanusu Raasi Neyargale

பாடல் ஹிட் ஆனதால் ஏகத்தும் குஷியான சஞ்சய் பாரதி, ஜிப்ரானை புகழ்ந்து தள்ளியுள்ளார். "நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவில் நனவானதைப்போல் இருந்தது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதுமே, இந்த படத்திற்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்று நான் முடிவு பண்ணிவிட்டேன். இப்போது இந்த படத்தின் ஒவ்வொரு பாடலுக்குக்கும் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது என் மனம் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. ஜிப்ரான் சிறந்த இசையை அமைத்து தருவது மட்டும் அல்ல, ஒவ்வொரு பாடலும் யார் பாடுனா சரியா இருக்கும் என்று, குரலை தேடித் தேடி தேர்வு செய்து, அவர்களை பாடவைத்து பாடலுக்கு மேலும் மெருகேற்றி இருக்கிறார்.

அனிரூத், சரத் சந்தோஷ், ராஜன் செல்லய்யா, செளமியா மகாதேவன், லிஜிஷா பிரவீண், கோல்ட் தேவராஜ் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ ஆகியோர் இப்படத்தில் பாடியிருக்கிறார்கள். கு.கார்த்திக், விக்னேஷ் சிவன், மதன் கார்க்கி, விவேகா மற்றும் சந்துரு ஆகியோரின் பாடல்களும் வெற்றிக்கு வெகுவாக மிக முக்கிய காரணம்.

நாயகன் மற்றும் நாயகியின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருப்பதால் பாடல்கள் மற்றும் ட்ரைலரின் வெற்றியைத் தொடர்ந்து படம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது என்கிறார் சஞ்சய் பாரதி. மேலும் இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றார். இப்படம் இந்த மாதம் 6ஆம் தேதி உலகெங்கும் திரைவர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X