twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளியானது ஜாங்கோ படத்தின் மிரட்டலான ட்ரெயிலர்!

    |

    சென்னை : இந்திய அளவில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் ஜாங்கோ.

    இந்தப் படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சிவி குமார் தயாரித்துள்ளார்.

    பெண் குழந்தை பிறந்த விஷயத்தையே இத்தனை நாட்களாய் மறைத்த நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் வீடியோ!பெண் குழந்தை பிறந்த விஷயத்தையே இத்தனை நாட்களாய் மறைத்த நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் வீடியோ!

    இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது ரிலீசாகியுள்ளது.

    ஜாங்கோ படம்

    ஜாங்கோ படம்

    தமிழில் வித்தியாசமான முயற்சியாக டைம் லூப் அடிப்படிடையில் ஜாங்கோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சிவி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டூடியோவுடன் இணைந்து படத்தை தயாரிக்கிறது.

    மனோ கார்த்திகேயன் இயக்கம்

    மனோ கார்த்திகேயன் இயக்கம்

    ஈரம், வல்லினம் மற்றும் முண்டாசுப்பட்டியில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள மனோ கார்த்திகேயன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

    டைம் லூப்பை மையமாக கொண்ட படம்

    டைம் லூப்பை மையமாக கொண்ட படம்

    தமிழில் டைம் டிராவல் குறித்த படங்கள் வெளிவந்துள்ள நிலையில் டைம் லூப்பை மையமாக கொண்டு தன்னுடைய படம் உருவாகி வருவதாகவும் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த படம்தான் ஜாங்கோ என்றும் மனோ கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் வித்தியாசமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சதீஷ்குமார் அறிமுகம்

    நடிகர் சதீஷ்குமார் அறிமுகம்

    படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    ஆடியோ ரிலீஸ்

    ஆடியோ ரிலீஸ்

    படத்தின் இசையை ஜிப்ரான் மேற்கொள்ள சமீபத்தில் வெளியிடப்பட்ட அனலே என்ற பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் ஆடியோ ரிலீசும் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மிரட்டும் ட்ரெயிலர் ரிலீஸ்

    இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பான வகையில் அது அமைந்துள்ளது. புதுமுக நடிகர் சதீஷ்குமார் தன்னுடைய சிறப்பான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    Jango movie's trailer released
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X