இந்த நெருக்கடியான நேரத்துல உள்ளாற இருக்கற அமைதிய வெளில கொண்டு வரணும்... சரத்குமார் ட்வீட்
சென்னை : கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் நெருக்கடியை உணர்ந்து வருகின்றனர்.
இந்த நேரத்தை பதற்றம் இன்றி சிறப்பாக கையாள வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சரத்குமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அமைதி குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அசாதாரண சூழலில் மக்கள்
கொரோனா ஏற்படுத்தியுள்ள பதற்றம் மற்றும் பாதுகாப்பின்மை பொதுமக்களை அசாதாரண சூழலில் தள்ளியுள்ளது. வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் அனைவரும் ஒருவித பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். எப்பொழுது இந்த சூழல் மாறும் என்ற மனப்பான்மையும் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது.

எதிர்கொள்ளும் நடிகர்கள்
இந்த சூழலை நடிகர், நடிகைகளும் எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது அனுபவங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். சிலர் மக்கள் இந்த அசாதாரண சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த அட்வைஸ்களும் கொடுத்து வருகின்றனர்.

வெளிகொண்டுவர வேண்டும்
இந்நிலையில், நடிகர் சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய வீட்டின் மாடியில் உள்ள கண் மூடிய புத்தர் சிலையின் முன்பு தனது வீட்டின் நாய் மண்டியிட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும் இந்த நெருக்கடியான சூழலில் தங்களுடைய மனதில் உள்ள அமைதியை வெளிக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வலிமையாக எதிர்கொள்ள வேண்டும்
இந்த கொரோனா காலத்தை எதிர்கொள்ள பலரும் பல விதங்களில் முயற்சித்து வருகின்றனர். சிலர் யோகா, மெடிடேஷன் என்று இறங்கி வருகின்றனர். நோய் பாதிப்பை மனதளவில் வலிமையாக எதிர்கொள்வதே முக்கியம் என்று மருத்துவர்களும் தெரிவித்து வருகின்றனர். அச்சத்தை கைவிடவும் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











