அரசியலில் டைமிங் ரொம்ப முக்கியம் ஆண்டவரே: இது தான் உங்க டக்கா?
Recommended Video

சென்னை: அரசியலில் டைமிங் ரொம்ப முக்கியம் ஆண்டவரே என்று நெட்டிசன்ஸ் கமலிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு கனத்த இதயத்துடன் பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டது. அன்றாடம் பேருந்தில் பயணம் செய்யும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கூடுதல் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரஜினி
பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசியலுக்கு வந்துள்ள ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் தட்டிக் கேட்க மாட்டார்களா என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இருவரும் அமைதியாக இருந்தனர்.

ட்வீட்
கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்த பிறகு கமல் அது குறித்து நேற்று ட்வீட்டியுள்ளார்.
கேட்டால் தானே
பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என்று கமல் ட்வீட்டியுள்ளார்.
டைமிங்
அரசியலில் டைமிங் ரொம்ப முக்கியம் ஆண்டவரே. இப்படி லேட்டாகவா ட்வீட் போடுவது என்று நெட்டிசன்ஸ் அவரிடம் ட்விட்டர் மூலம் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











