நடிகையை பார்த்ததும் பாய்ந்த இயக்குநர்.. டீசர் வெளியீட்டு விழாவில் நச்சு நச்சுனு முத்தம்!
சென்னை: இந்த சான்ஸை விட்டா இனிமேல் நெருங்கவே முடியாது என்று தெரிந்து கொண்ட இயக்குநர் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
பாலகிருஷ்ணா நடித்த வீரபத்ரா, கோபிசந்த் நடித்த யக்ஞம் போன்ற ஹிட் படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஏ.எல்.ரவிக்குமார்.

இவர் தற்போது ராஜ் தருணை கதாநாயகனாக வைத்து திரகபாதர சாமி என்ற படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 15ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது
திரகபாதர சாமி: காதல் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் ராஜ் தருண், மால்வி மல்ஹோத்ரா, மன்னாரா சோப்ரா, மக்ரந்த் தேஷ்பாண்டே, ரகு பாபு, ஜான் விஜய் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடிகைக்கு நச்சுனு முத்தம்: இந்நிலையில் திரகபாதர சாமி திரைப்படத்தின் டிசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தில் ராஜ், இயக்குநர் ஏ.எல்.ரவிக்குமார் மற்றும் நடிகை மன்னாரா சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது, நடிகை மன்னாரா சோப்ரா இயக்குநர் அருகே போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை மீறிய இயக்குநர் நடிகையை கட்டிப்பிடித்து நச்சுனு முத்தம் கொடுத்தார்.
சலசலப்பு: இயக்குநரின் இந்த செயலை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை என்ன செய்கிறார் என்று தெரியாமல் அப்படியே சிரித்து மழுப்பினார். இயக்குநரின் இந்த மோசமான செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இதனால் டீசர் வெளியீட்டு விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பொது இடத்தில் இப்படியா: இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து பலரும் இயக்குநர் ஏ.எல்.ரவிக்குமாரை திட்டி வருகின்றனர். பிரபலமான இயக்குநருக்கு பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்வது என்று தெரியாதா, பாவம் அந்த நடிகை பொது இடம் என்பதால், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என்று இணையத்தில் இயக்குநருக்கு எதிராக கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications