twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருச்சிற்றம்பலம் நித்யா மேனனின் நடிப்பு ..வசந்த், சிம்புதேவன், வெங்கட் பிரபு..ஒரு மனதாக பாராட்டு

    |

    திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பாக நடித்ததாக நித்யாமேனனின் நடிப்பை முன்னணி இயக்குநர்கள் வசந்த், சிம்புதேவன், வெங்கட்பிரபு பாராட்டியுள்ளனர்.

    சென்னையில் நடைப்பெற்ற குறும்பட போட்டியில் கலந்துக்கொண்ட 5000 பேர் மத்தியில் நித்யா மேனனை மூன்று பெரும் இயக்குநர்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் சினிமா பிற மொழி சினிமாக்களில் சமீப காலமாக சிறப்பாக நடித்து வருபவர் நித்யா மேனன், திருச்சிற்றம்பலம் படம் இவரது நடிப்பை வெகுவாக வெளிக்கொணர்ந்துள்ளது.

    சுந்தர் சியின் காபி வித் காதல் ட்ரெயிலர் லான்ச்.. வீல் சேரில் வந்த டிடி.. ரசிகர்கள் கவலை! சுந்தர் சியின் காபி வித் காதல் ட்ரெயிலர் லான்ச்.. வீல் சேரில் வந்த டிடி.. ரசிகர்கள் கவலை!

    குறும்பட இயக்குநர்களுக்கான பிரம்மாண்ட போட்டி

    குறும்பட இயக்குநர்களுக்கான பிரம்மாண்ட போட்டி

    தமிழகத்தின் பிரமாண்ட ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் திறமை திருவிழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் நடுவர்களாக இயக்குநர் வஸந்த், இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினார்கள். அந்த விழாவில் பேசிய அவர்கள் அனைவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனை புகழ்ந்து பாராட்டினார்கள்.

    அழகான கருத்துடன் வெளிவந்த திருச்சிற்றம்பலம்

    அழகான கருத்துடன் வெளிவந்த திருச்சிற்றம்பலம்

    தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படம் முக்கோண காதல் கதைபோல் தோற்றமளித்தாலும் உள்ளூர அழகான கருத்தை இழையோட விட்டிருப்பார் இயக்குநர். தனுஷ் சராசரி இளைஞர் அவரது வீட்டில் கீழ் மாடியில் குடியிருக்கும் நித்யா மேனன் குடும்பமும் தனுஷ் குடும்பமும் ஆண்டாண்டுகளாக குடும்ப நண்பர்கள். தனுஷ் வீட்டில் ஒருவராக அக்கறையுடன் பழகுவார் நித்யா மேனன்.

    அல்ட்ரா மாடர்னை நம்பி ஏமாறும் தனுஷ்

    அல்ட்ரா மாடர்னை நம்பி ஏமாறும் தனுஷ்

    தனுஷ் திடீரென பள்ளித்தோழி ராஷிகா கன்னாவை சந்திப்பார். அல்ட்ரா மாடர்ன் ராஷிகா கன்னா தானிடம் பேசியதும், அணைத்ததும் தன்னை அவர் காதலிப்பதாக எண்ணி ப்ரபோஸ் செய்வார் தனுஷ். இதற்கு கவிதை எழுதுவது முதல் உதவி செய்வார் தோழி நித்யா மேனன். அல்ட்ரா மாடர்னான எங்கள் உலகத்தில் கட்டி அணைப்பது, தனியாக சந்திப்பது எல்லாம் சாதாரணம் அதை காதல் என உருவகப்படுத்தியது உனது தவறு என்று விலகுவார் ராஷிகா கன்னா.

    முக்கோண காதலா இனக்கவர்ச்சியா?

    முக்கோண காதலா இனக்கவர்ச்சியா?

    அதற்கு நீ கிடைக்காததற்கு அந்த பெண் தான் வருத்தப்படணும் என ஆறுதல் கூறுவார் நித்யா மேனன். அதன் பின்னர் சொந்த ஊருக்கு செல்லும் தனுஷ் அங்கு பிரியா பவானி ஷங்கரை பார்த்து காதல் கொள்வார் அதற்கும் நித்யா மேனன் உதவி செய்வார். ஆனால் பிரியா பவானி சங்கர் நாம் எதற்கு டச்சுல இருக்கணும் என கேட்பார். ஒருவார சந்திப்பு ஒன்றுமில்லாமல் போகும். இதன் பின்னர் காதல் என்றால் என்ன இனக்கவர்ச்சி என்றால் என்ன? என்பதை தாத்தா பாரதிராஜா உணரவைப்பார். இந்தப்படத்தில் நித்யா மேனனின் இயல்பான நடிப்பு அபாரமாக இருக்கும்.

    திருச்சிற்றம்பலத்தில் இயல்பான நடிப்பு

    திருச்சிற்றம்பலத்தில் இயல்பான நடிப்பு

    தனுஷை அடித்த தந்தை பிரகாஷ் ராஜை உரிமையுடன் கண்டிக்கும் காட்சியிலும், தாத்தா பாரதிராஜாவை கலாய்க்கும் காட்சியில், தனுஷிடம் உரிமையுடன் சண்டை போடும் காட்சியில் தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிகை கிடைத்து விட்டார் எனும் அளவிற்கு நித்யா மேனனின் நடிப்பு இருக்கும். கவர்ச்சி பொம்மைகளாக, நடிக்கத்தெரியாமல் அலங்கார பொம்மைகளாக குத்தாட்டம் போடும் நடிகைகள் மத்தியில் அடுத்த வீட்டு பெண் போல் தனியாக தெரிகிறார் நித்யா மேனன். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்படுகிறது.

    விமர்சகர்களை தாண்டி இயக்குநர்கள் பாராட்டு

    விமர்சகர்களை தாண்டி இயக்குநர்கள் பாராட்டு

    ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டு இயல்பான ஒன்று என்றாலும் தமிழகத்தின் முன்னணி இயக்குநர்கள் ஒருசேர வருங்கால இயக்குநர்கள் மத்தியில் நடிப்பு பற்றி பேசும்போது நித்யா மேனன் சிறப்பாக நடித்துள்ளார் என்று மூவரும் சொன்னது நித்யா மேனனின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி எனலாம். இயக்குநர் வசந்த் மூத்த இயக்குநர் அவர் பேசும்போது, "

    இயக்குநர் வஸந்த் பாராட்டு

    இயக்குநர் வஸந்த் பாராட்டு

    இயக்குநர் வஸந்த் பேசும்போது, " சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தை இயக்கிய மாதவனை இயக்குநராக பிடித்திருக்கிறது. மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. அதேபோல் அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கமும் பிடித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படமும் எனக்கு பிடித்த படம். திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடிப்பும், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாராவின் நடிப்பும் பிடித்திருக்கிறது" என்றார்.

    இயக்குநர் சிம்புதேவன் பேசும்போது,

    இயக்குநர் சிம்புதேவன் பேசும்போது, "

    சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தை இயக்கிய மாதவனை இயக்குநராக பிடித்திருக்கிறது. மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. அதேபோல் அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கமும் பிடித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படமும் எனக்கு பிடித்த படம். திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் நடிப்பும், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாராவின் நடிப்பையும் பிடித்திருக்கிறது என்றார்.

    3 முன்னணி இயக்குநர்களின் பாராட்டு

    3 முன்னணி இயக்குநர்களின் பாராட்டு

    இயக்குநர் சிம்புதேவன் பேசும்போது, "மாநாடு படத்தில் சிம்புவின் நடிப்பு பிடித்திருந்தது. ராக்கெட்ரி படத்தில் மாதவன் நடிப்பும், திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனின் நடிப்பும் பிடித்திருந்தது" என்றார். இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, "விக்ரம் படம் விரும்பி பார்த்தேன். ஓடிடி-யில் வெளியான சுழல் தொடர்கதையை விரும்பி பார்த்தேன். சமீபத்தில் பிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவை பிடித்திருந்தது. அதேபோல், திருச்சிற்றம்பலமும் நன்றாக இருந்தது. நித்யாமேனன் சிறப்பாக நடித்திருந்தார்" என்றார்.

    அபர்ணா பாலமுரளிபோல் தேசிய விருது பெற நித்யா மேனனுக்கு வாய்ப்பு

    அபர்ணா பாலமுரளிபோல் தேசிய விருது பெற நித்யா மேனனுக்கு வாய்ப்பு

    நித்யா மேனனுக்கு கிடைத்துள்ள பாராட்டு அவரது நடிப்புக்கு கிடைத்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் (இதில் 2 ஃபிலிம் ஃபேர் விருது) தேர்ந்தெடுத்த பாத்திரங்களில் நடித்துவரும் நித்யா மேனன், வரும் காலங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் படங்களை தேர்வு செய்து நடித்தால் அபர்ணா பாலமுரளி போன்று அடுத்து தேசிய விருது பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    English summary
    Leading directors Vasanth, Simbudevan and Venkatprabhu praised Nithya Menon's performance as his excellent performance in Thiruchirthambalam. It is noteworthy that Nithya Menon was praised by three great directors in before the 5000 people who participated in the short film competition held in Chennai. Nithya Menon who has been acting well in Tamil cinema and other language films recently, the film Tiruchirambalam has brought out her performance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X