»   »  திருமா. பட தயாரிப்பாளர் கைது!

திருமா. பட தயாரிப்பாளர் கைது!

Subscribe to Oneindia Tamil

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன், புரட்சிப் போராளி வேடத்தில் நடித்துள்ள அன்புத்தோழி படத்தின் தயாரிப்பளர்திடீர் என கைது செய்யப்பட்டார்.

அரசியலில் கலக்கி வரும் திருமாவளவன் முதல் முறையாக மேக்கப் போட்டு நடித்த படம் அன்புத்தோழி. ஹீரோவாக இதில் அவர் நடித்துள்ளார்.

படம் ஆரம்பித்தபோது வேகம் பிடித்துக் கிளம்பியது. ஆனால் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இப்போது படுத்துக் கிடக்கிறது.

மதுக்கூர் மூவிஸ் நிறுவனம் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிப்பில் கடந்த ஆண்டு இப்படத்திற்குப் பூஜை போடப்பட்டது. திருமாவுடன் இந்ைதுப்ரீத்தி வர்மாவும் இப்படத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர புதுமுகம் பிரபு என்பவரும் படத்தில் உள்ளார். அன்பு சரவணன் படத்தைஇயக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் நிதிப் பிரச்சினையால் படம் வளராமல் தட்டுத் தடுமாறியது. பிரச்சினை தீர திருமா கொஞ்சம் உதவினாராம். ஆனால் திடீரெனதயாரிப்பிலிருந்து விலகி விட்டார் சிங்காரவடிவேலன். அதன் பின்னர் திருச்சியைச் சேர்ந்த பிரபாவதி என்பவர் படத் தயாரிப்பை ஏற்றுக்கொண்டார். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

படத்தை முடித்து விட்டு வடபழனியில் உள்ள ஜெமினில கலர் லேபுக்கு படத்தை அனுப்பினர். இந்த நிலையில் திடீரென அங்கு வந்த ஒரு கும்பல்படத்தை எடிட் செய்து கொண்டிருந்த எடிட்டர் பாபுவையும், அவரது உதவியாளர்களையும் தாக்கி விட்டு படச் சுருளை பறித்துக் கொண்டு ஓடிவிட்டது.

இந்தப் படத்தை மட்டும் எடுத்துச் செல்லாமல், காசு இருக்கணும் (பாக்யராஜ் நடித்த படம்) படத்தின் படப் பெட்டியையும் எடுத்துக் கொண்டுஅக்கும்பல் ஓடி விட்டது.

பீதியடைந்த பாபு, உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு படச்சுருளை லவட்டிக்கொண்டு ஓடிய 6 பேரையும் வளைத்துப் பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், அன்புத்தோழி படத்தின் முன்னாள் தயாரிப்பாளரான சிங்கார வடிவேலன் சொல்லித்தான் கடத்தியதாக தெரிவித்தனர்.இதையடுத்து சிங்கார வடிவேலனையும் போலீஸார் கைது செய்தனர்.

படச்சுருளை கடத்தியது ஏன் என்பது குறித்து வடிவேலன் கூறுகையில், பிரபாவதி என்னிடம் படத்தை வாங்கிய பின்னர் அதற்குரிய பணத்தை அவர்கொடுக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலான பணத்தையேக் கொடுத்தார். அவரிடமிருந்து பணத்தை வசூலிக்கவே படச்சுருளை கடத்தினேன்என்றார்.

அன்புத்தோழிக்கு தொடரும் பிரச்சினைகளால் படம் வெளிவருவதில் பெரும் தாமதமும், குழப்பமும் நிலவுகிறது. திருமா நடித்துள்ள முதல் படம்என்பதால் படத்தை பிரச்சினையின்றி மே 1ம் தேதி ரிலீஸ் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை இப்போது திருமா தரப்பு எடுத்துவருகிறதாம்.

அன்புச் சகோதரியிடமும் உறவு சரிப்பட்டு வரவில்லை, அன்புத் தோழியாலும் சரமாரி பிரச்சினை. திருமாவுக்கு சரியான திருகுவலிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil