twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துறுதுறு நஸ்ரியா, துடிப்பான ஜெய்- ஆனாலும் மனம் கவர மறுக்கும் நிக்காஹ்!

    |

    சென்னை: இதோ வருகிறது... அதோ வருகிறது என்று கூறிக் கொண்டிருந்த "திருமணம் எனும் நிக்காஹ்" படம் ஒருவழியாக வந்தேவிட்டது.

    ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் அதற்குள் ஆயிரெத்தெட்டு சோதனைகளைக் கடந்து விட்டது.

    படத்தில் குறை, நிறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் சில விஷயங்கள் ரசிக்க வைக்கின்றன. அப்படி கவர்ந்த விஷயங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம்...

    மாமா.. செல்லை சித்த ஆப் பண்ணுங்கோ

    மாமா.. செல்லை சித்த ஆப் பண்ணுங்கோ

    குடும்பமே ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஒருபக்கம் அத்திம்பேரின் நச்சரிப்பு, தன்னுடைய மகள் மைதிலியை விஜயராகவாச்சாரிக்கு (அதாங்க நம்ம ஜெய்) திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று.

    டைமிங்பா டைமிங்

    டைமிங்பா டைமிங்

    அவர் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீர், திடீரென்று செல்போன் ரிங்டோன்கள் அவருடைய பேச்சுக்கும் மற்றவர்களின் பதிலுக்கும் இடையில் தொணதொணக்கின்றன.. டைமிங் காட்சி என்ற பெயரில் இப்படி ஒரு படுத்தல்...

    மைதிலி என் உயிர்டா

    மைதிலி என் உயிர்டா

    இதில் அந்த குடுமி பையன் வேற "டேய் மைதிலி என் உயிர்டா" என்று ஒரே ஃபீலிங்ஸ்... அடிக்கடி செந்தில் மாதிரி தூக்கு வேற மாட்டிக் கொள்ளச் செல்கிறார்.

    பாண்டியராஜன் ரவுசு

    பாண்டியராஜன் ரவுசு

    பாண்டியராஜன் வேறு யாரும் இல்லை நம்ம முன்னாள் ஹீரோதான். இன்னாள் "கட்டைப்புலி"..இல்லை இல்லை 'ரோஷன் குமார்'. ஒரு டிக்கெட்டுக்காக பேரை மாத்திக் கொண்டு படாதபாடு படும் அவர் கடைசியில் தன் உண்மையான பெயரையே மறந்து விடுகிறாராம்.. பெயரை மாத்திக்கிட்டு போறதெல்லாம் ஓகே.. ஆனா அதுக்காக இந்த அளவுக்கு காட்சிகள் ரொம்பவே ஓவர்!

    பாவடை, தாவணி கூட அழகுதான்

    பாவடை, தாவணி கூட அழகுதான்

    படத்தில் நஸ்ரியாவின் உடைகள் அனைத்தும் அழகு. கண்டிப்பாக பெண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் 'கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்' பாடலில் வரும் ராஜஸ்தானும் இல்லாமல், நம்ம ஊர் பட்டுப் பாவாடையும் இல்லாமல் இருக்கும் அவரது உடை ஒரு தினுசாத்தான் இருக்கு.

    அசத்தும் ஆடை வடிவமைப்பு

    அசத்தும் ஆடை வடிவமைப்பு

    மற்றொரு கதாநாயகியாக வரும் ஹேபா பட்டேலின் காக்ரா சோளி பெண்களை மெய்மறந்து பார்க்க வைக்கின்றது. வேலைப்பாடுகளும் அருமைதான். ஊதாவும், சந்தனமும் கலந்த கல் வேலைப்பாடுகள் அருமை.

    அன்புதான் அனைத்திற்கும் பாலம்

    அன்புதான் அனைத்திற்கும் பாலம்

    மதங்களைத் தாண்டி, அது பற்றிய குழப்படிகளையும் தாண்டி பகவத் கீதையும், குரானும், பைபிளும் சொல்வது அன்பும், யாரையும் ஏமாற்றதே போன்றவைதான் என்ற கருத்துகள் அருமை.

    English summary
    Tirumanam ennum nikha film released. The film will contain some interesting scenes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X