திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட்... தனுஷூடன் நடிக்க நெல்லை இளைஞர்களுக்கு ஆடிஷன்
Recommended Video
சென்னை: தனுஷூடன் நடிக்க திருநெல்வேலி இளைஞர்கள் சிலர் ஆடிஷன் நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த படம், 'அசுரன்'. திருநெல்வேலியில் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள பாட்டாஸ் படம் வரும் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

மாரி செல்வராஜ்
இதையடுத்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜின் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு கர்ணன் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜிஷா விஜயன்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.

பிரமாண்ட செட்
இந்தப் படத்திலும் தனுஷ் நெல்லை வழக்கில் பேசி நடிக்க இருக்கிறார். படத்துக்காக திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை
மாஞ்சோலை தொழிலாளர்கள் பற்றிய கதை என்று சொல்லப்படும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் உள்ளூர் இளைஞர்களையும் சில கேரக்டர்களை நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார்.

ஆடிஷன்
இதற்காக அங்கு ஆடிஷன் நடந்துள்ளது. இதில் சில இளைஞர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்கள் தனுஷுடன் முக்கியமான சில கேரக்டர்களில் நடிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











