சுட்டெரிக்கும் வெயில்.. செருப்பில்லாமல் நடந்து போன குழந்தைகளுக்கு செருப்பு.. நடிகரின் கடவுள் மனது!
சேலம்: திருப்பாச்சி படத்தில் கண்ணப்பன் என்ற கேரக்டரில் விஜய்க்கு நண்பனாக வந்து நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் பெஞ்சமின். முன்னதாக முரளி மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியான இயக்குனர் சேரனின் வெற்றி கொடி கட்டு படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார் பெஞ்சமின். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கேரக்டர்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து சக நடிகர்களின் பிரச்சினைகளுக்கு வாய்ஸ் கொடுத்து வருகிறார் பெஞ்சமின். மேலும் நலிவுற்ற கலைஞர்களுக்கு அறக்கட்டளை ஒன்றை துவங்கியுள்ளார். இந்நிலையில் சேலத்தில் மக்களை வாட்டி வதைத்த வெயிலின் கொடுமையில் இருந்து அவர்களை காக்கும் வகையில் செருப்பு இல்லாமல் நடந்து போனவர்களுக்கு செருப்புகளை வழங்கி அழகு பார்த்துள்ளார் பெஞ்சமின். அவரது இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகர் பெஞ்சமின்: விஜய்யின் நண்பர் கண்ணப்பனாக திருப்பாச்சி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் பெஞ்சமின். முன்னதாக சேரன் இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டில் பார்த்திபன் -முரளி இருவரும் இணைந்து நடித்து வெளியான வெற்றி கொடி கட்டு படத்தில் காமெடி கேரக்டரில் என்ட்ரி கொடுத்தவர் பெஞ்சமின். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து தனது சக நடிகர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது உதவி செய்யக்கோரி பெஞ்சமின் வீடியோ வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சக நடிகர்களுக்கு உதவி: தன்னால் முடிந்த அளவிற்கு சக நடிகர்களுக்கு தேவையான உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து நடிகர் வடிவேலு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இவர் தைரியமாக சமூக வலைதளங்களில் பேசியதையும் பார்க்க முடிந்தது. தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற ஒன்றை இவர் துவங்கியுள்ளார். நலிந்த மற்றும் வறுமையில் வாடும் நடிகர்களுக்கு உதவும் எண்ணத்தில் இதை துவங்கியுள்ளதாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
செருப்பில்லாத குழந்தைகளுக்கு செருப்பு: இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 108 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இதனால் மக்கள் அனல் காற்றில் சிக்கி தவித்து வருகின்றனர். பொதுமக்கள் சாலையில் வெறுங்காலில் நடந்து செல்வதை கண்ட காமெடி நடிகர் பெஞ்சமின் அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். தொடர்ந்து ஹெல்மெட் கடைக்காரர் ஒருவரின் உதவியும் பெஞ்சமினுக்கு கிடைத்த சூழலில் சேலம் அரசு மருத்துவமனை சாலையில் மூட்டை மூட்டையாக செருப்புகளுடன் களமிறங்கினார்.
பாராட்டுக்களை பெற்ற நடிகரின் செயல்: செருப்பில்லாமல் நடந்து போனவர்களுக்கு செருப்புகளை கொடுத்து அழகு பார்த்தார் பெஞ்சமின். தொடர்ந்து வெயில் கொடுமையில் சிக்கி தவித்தவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் கொடுத்து உதவினார். இதில் பெரியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பெஞ்சமின் செருப்புகளை வழங்கி உதவினார். அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் பொது மக்களுக்கு உதவ வேணடும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட பெஞ்சமினின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றது.


Click it and Unblock the Notifications











