Kamal haasan: உத்தம வில்லன் பட விவகாரம்.. கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

சென்னை: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பாலசந்தர், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன். இந்தப் படத்தின் கதை வித்தியாசமான வகையில் உயிரிழக்கும் தருவாயில் ஒரு கலைஞன் தன்னுடைய கடைசி ஆசையாக தான் விரும்பும் கதைக்களத்தில் நடிப்பதாக அமைந்திருந்தது.

உத்தம வில்லன் படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்ததைப் போல இல்லாமல் படுதோல்வி அடைந்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

Tirupathi brothers register complaint against Kamal haasan in tamil film producers council

உத்தம வில்லன் படம்: நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாலச்சந்தர், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன். இந்த படத்தை பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இறக்கும் தருவாயில் உள்ள ஒரு நடிகர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக அமையும் படியான ஒரு படத்தில் நடிப்பதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தது. படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாமல் படுத்து தோல்வி அடைந்தது.

திருப்பதி பிரதர்ஸ் புகார்: இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர் கமல்ஹாசன் உறுதி அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஒன்பது வருடங்கள் ஆகியும் இதுவரை நடிகர் கமல்ஹாசன் இது குறித்து எந்த விதமான பதிலும் அளிக்காததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்று இந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்: தங்களுக்கு கடன் கொடுத்த அனைவரும் தற்போது தங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் திருப்பதி பிரதர் சார்பில் அதன் தயாரிப்பாளர் மற்றும் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் இந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். உத்தம வில்லன் படத்தை தயாரித்ததால் தாங்கள் மிகப்பெரிய அளவில் கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பதாகவும் இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு கமல்ஹாசனின் கால்ஷீட்டை பெற்றுத் தருமாறும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தாங்கள் கூறியுள்ளது.

விருப்பமில்லாத கதை: தாங்கள் சொன்ன கதையில் நடிக்காமல் உத்தமவில்லன் கதையில் கமல்ஹாசன் நடித்தார் என்றும் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது என்றும் கதையை தாங்கள் விரும்பிய வகையில் உருவாக்க கமல்ஹாசன் மறுத்துவிட்டார் என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த்ரிஷ்யம் படத்தை உருவாக்கவே தாங்கள் விரும்பியதாகவும் ஆனால் அந்தப்படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு கமல்ஹாசன் நடித்துக் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். இதனிடையே, உத்தம வில்லன் வெளிநாட்டு உரிமையை பெற்ற கமல் தமிழ்நாட்டில் படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டதால் வெளிநாட்டில் படத்தை ரிலீஸ் செய்து விட்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நடவடிக்கை வேண்டும்: முன்னதாகவே படம் ரிலீஸ் ஆனதால் படம் தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை என்றும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. உத்தம வில்லன் படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்கள் நிறுவனத்திற்கு விருப்பமான கதையில் கமல் நடிக்கவில்லை எனவும் இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு வேறு படம் செய்து தருவதாக உத்தரவாத கடிதம் அளித்துள்ளார் ஆனால் தற்போது வரை இதில் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத சூழலில் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X