திருப்பதி கூட்ட நெரிசல் பலி.. பவன் கல்யாண் ஓபன் ஸ்டேட்மெண்ட்.. துணை முதல்வர் சொன்னது இதுதான்!
திருப்பதி: புஷ்பா படத்தை முதல் நாள் பார்க்க டோலிவுட் ரசிகர்கள் முண்டியடித்ததில் ஒரு பெண் பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்தாக திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்த நிலையில், அந்த விபத்து ஏற்பட்டது.
சொர்க்கவாசல் சேவையை காண திருப்பதியில் அலைமோதிய கூட்டம் காரணமாக 6 பேர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். பொதுவாகவே ஜருகண்டி ஜருகண்டி என கத்திக் கொண்டு தினமும் திருப்பதியில் பெருங்கூட்டம் ஏழுமலையானை பார்க்க முண்டியடித்துச் செல்கிறது.

கொஞ்சம் மிஸ் ஆனாலும் நம்முடைய கைகளிலும் கால்களிலும் ரத்தம் வரும் அளவுக்கு இடித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். பக்தர்களை நெறிப்படுத்த ஏகப்பட்ட முயற்சிகளை தேவஸ்தானம் செய்தாலும் ஆண்டவனை பார்க்கும் ஆரவாரத்தில் மக்கள் முந்திக் கொண்டு ஓடுவதால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவத்துக்கு அரசு முழு பொறுப்பேற்பதாக பேசியுள்ளார்.
லட்டு பிரச்சனை: ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற நிலையில், துணை முதல்வராக நடிகர் பவன் கல்யாண் பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் ஆன பின்னரும் அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெடித்த லட்டு சர்ச்சை ஒட்டுமொத்த இந்துக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திவ்ய பிரசாதமான லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்படம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியான நிலையில், திருப்பதியை சுத்தம் செய்கிறேன் என விரதம் எல்லாம் இருந்து பவன் கல்யாண் பல விஷயங்களை செய்திருந்தார்.
அரசு பொறுப்பேற்கும்: சேலத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட மொத்தம் 6 பேர் திருப்பதியில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் பலியான சம்பவம் மீண்டும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. திருப்பதிக்கு சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என தினமும் லட்சக் கணக்கில் பக்தர்கள் சென்று வரும் நிலையில், சமீப காலமாக திருப்பதியை சுற்றி மாட்டுக் கொழுப்பு சர்ச்சை, உயிர் பலி என நடைபெற்று வருவது பக்தர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்த கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் நாங்கள் ஓடி ஒளியமாட்டோம். முழு பொறுப்பையும் அரசு ஏற்கும். கூடிய விரைவில் திருப்பதியில் கூட்ட நெரிசல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என வெளிப்படையாக பவன் கல்யாண் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











