பெரிய நடிகர்களுக்கே படமில்லை.. இப்படியே போன சினிமா அழிந்துவிடும்.. திருப்பூர் சுப்ரமணி!
சென்னை: திரைப்படங்கள் வெளியான 4 வாரங்களுக்குள் OTT தளங்களில் வெளியிடுவதை எதிர்த்து பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், திரையரங்குகளின் வருமானம் பாதிப்பதாகவும், பார்வையாளர்களை ஈர்க்க முடியாமல் போவதாகவும் கூறி, தயாரிப்பாளர் சங்கங்கள், திரையரங்கு சங்கங்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது. இந்த பிரச்சனை குறித்து பேசி உள்ள திரையரங்க உரிமையாளர் சங்க உறுப்பினர்களுக்கு திரு திருப்பூர் சுப்ரமணி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில், கடந்த இரண்டு மாத காலமாக திரையரங்குகளை நடத்துவதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்றாக தெரியும். இனி வரும் காலமும் அப்படித்தான் இருக்கப்போகிறது. அதற்கு காரணம், ஜனவரி மாதத்தில் மட்டும் தான் இரண்டு, மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன் பிறகு பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் எந்த படங்களும் வெளியீட்டுக்கு தயாராக இல்லை. இதற்கு, மிக முக்கிய காரணம் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் வருகை குறைந்தது தான். அதற்கு காரணம் தியேட்டரில் வெளியான 4 வாரத்தில் படத்தை ஓடிடியில் வெளியிடுவது தான். 8 வாரத்திற்கு பிறகு ஓடிடியில் படத்தை வெளியிடலாம் என பல முறை கேட்டு, கெஞ்சியும் பார்த்துவிட்டோம் யாரும் அதை செவி கொடுத்து கேட்கவில்லை. இதன் விளைவாக தமிழ் சினிமா மொத்தமும் பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

ஓடிடி விவகாரம்: படம் வெளியான நான்கு வாரத்திலேயே படம் ஓடிடியில் வெளிவந்து விடுவதால், தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்துவிட்டது. இதை பலமுறை எடுத்துச் சொன்ன பிறகு, தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால், பெரிய தயாரிப்பாளர்கள் மூன்று, நான்கு பெயர் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள். நான்கு வாரத்திற்கு பிறகு படத்தை வெளியிட்டால், எங்களுக்கு பணம் கிடைப்பதில் பிரச்சனை இருக்கிறது என சொல்கிறார்கள். அவர்களின் பிடிவாதத்தால் இன்று திரைப்படத்தின் வசூல் அதல பாதாளத்திற்கு சென்று இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு எடுத்து சொன்னாலும் அது புரியவில்லை. பெரிய தயாரிப்பாளர்கள் நான்கு பேரால் ஒட்டுமொத்த சினிமாவும் பாதிக்கப்படுகிறது.
தயாரிப்பாளரிடம் பணம் இல்லை: மிகப்பெரிய செலவில் எடுக்கப்பட்ட தெலுங்கு திரைப்படம், வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டு படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் பிரச்சனையில் தான் சிக்கி இருக்கிறது. இப்பொழுது எந்த தயாரிப்பாளர்களும் படத்தை எடுப்பதற்கு முன்வருவதில்லை. அதற்கு காரணம், என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் நான்கு வாரத்திலேயே படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டும் என பிடிவாதத்தோடு இருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டு எந்த படமும் வெளியீட்டுக்கு தயாராக இல்லை. தற்போது, பெரிய நடிகர்கள் கையை கட்டிக்கொண்ட வீட்டில் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் பெரிய நடிகர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு எந்த தயாரிப்பாளர்களிடமும் பணம் இல்லை.
கார்ப்ரேட் நிறுவனங்கள் நடிகர்கள் கேட்கும் பணத்தை 100 கோடி, 200 கோடி என அள்ளிக் கொடுத்துவிட்டனர். எப்போது பெரிய நடிகர்களையே படம் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். அதுபோல தான் சிறிய நடிகர்களும் ஒரு படம் ஓடிவிட்டதும், சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்கள். இதுஎல்லாம் சினிமாவின் அழிவுக்கு தான் வழிவகுக்கும், வரும் செவ்வாய்க்கிழமை மீட்டிங் உள்ளது. அதில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என


Click it and Unblock the Notifications











