பராசக்தி முன்னாடியே ரிலீஸ்.. நாங்க அப்படி சொன்னதால்தான் செஞ்சாங்க.. போட்டி இல்லை.. திருப்பூர் சுப்ரமணியம் ஓபன்
சென்னை: தமிழ் திரைத்துறையில் 2026ஆம் ஆண்டு பொங்கல் களைகட்டவிருக்கிறது. ஒன்பதாம் தேதி ஜனநாயகனும், பத்தாம் தேதி பராசக்தியும் ரிலீஸாகின்றன. விஜய்யுடன் சிவகார்த்திகேயன் க்ளாஷுக்கு வந்திருப்பதால்; இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இதுகுறித்து பேசி சில விஷயங்களை வெளிச்சமாக்கியிருக்கிறார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. அதற்கு அடுத்த நாளான ஜனவரி பத்தாம் தேதி; சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படம் வருகிறது. முதலில் 14ஆம் தேதிதான் பராசக்தி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ரிலீஸை படக்குழு பிளான் செய்துவிட்டது.
வெடித்த மோதல்கள்: இது விஜய்யின் கடைசி படம் என்பதால் பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று அவரது ரசிகர்கள் கணக்கு போட்டிருந்தார்கள். ஆனால் பராசக்தி வருகை அதற்கு கொஞ்சம் இடைஞ்சலை கொடுத்திருக்கிறது. சிவாவைவிடவும் விஜய் பெரிய நடிகர்தான் என்றாலும்; எஸ்கேவுக்கென்று அமரன் படத்துக்கு பிறகு மார்க்கெட் பெரிதாக உயர்ந்துவிட்டது. எனவேதான் ஜனநாயகன் வசூல் பாதிக்குமோ என்ற அச்சத்தில் விஜய்யின் ரசிகர்கள் எஸ்கேவையும், அவரது ரசிகர்களையும் சோஷியல் மீடியாவில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவருகிறார்கள்.

பற்ற வைத்த ஒரு தரப்பினர்: இது ஒருபக்கம் இருக்க மற்றொரு தரப்பினரோ; இந்த மோதலுக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான். அவர் விஜய்யோடு மோதி தனது மாஸை நிரூபிக்க ஆசைப்பட்டுத்தான் இந்த க்ளாஷை உருவாக்கியிருக்கிறார் என்று பற்ற வைத்தார்கள். ஆனால் சிவாவின் ஆதரவாளர்களோ அதெல்லாம் இல்லை; இந்த விஷயத்தில் தேவையில்லாமல் அவரை ஃப்ரேம் செய்கிறார்கள். இது முழுக்க தயாரிப்பாளர்கள் முடிவுதான் என்று தொட்ர்ந்து கூறிவருகிறார்கள்.
திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி: இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தனியார் யூடியூப் சேனலான டூரிங் டாக்கீஸுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இந்த விஷயம் பற்றி பேசுகையில், "ஜனநாயகன் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாகத்தான் அவர்களது பிளானாக இருந்தது.ஜனவரியில் ரிலீஸ் செய்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என நினைத்தார்கள். ஆனால் பராசக்தி படமோ பூஜை போடப்பட்டபோதே பொங்கல் ரிலீஸ் என்று சொல்லிவிட்டார்கள்.
இதுதான் காரணம்: அடுத்தடுத்த நாட்களில் ஜனநாயகனும், பராசக்தியும் வருவது போட்டிக்காக செய்யவில்லை. பராசக்தியை பொறுத்தவரை நாங்கள் (திரையரங்க உரிமையாளர்கள்) அவர்களிடம், '14ஆம் தேதி ரிலீஸ் செய்தால் ஆறிலிருந்து ஏழு நாட்கள் கேப் இருக்கிறது. ஜனநாயகன் பெரிய ஹிட்டாகும் என்றுதான் ரிலீஸ் செய்கிறோம். இரண்டு வாரங்கள் அந்தப் படத்தைத்தான் திரையிடுவோம். நீங்கள் 26ஆம் தேதிக்கு வர வேண்டும் என சொன்னோம். அதற்கு அவர்களோ நாங்கள் இந்த தேதியை பிளான் செய்துதான் வியாபாரம் எல்லாம் செய்துவிட்டோம். பத்தாம் தேதியே வருகிறோம் என சொல்லித்தான் வந்தார்களே ஒழிய; நிச்சயம் போட்டிக்கு வரவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











