'ஒடிடியில் வெளியிட்டு தவறான முடிவை எடுத்துவிட்டார்..' நடிகர் சூர்யாவை விளாசும் பிரபல விநியோகஸ்தர்!
சென்னை: ஒடிடியில் படத்தை வெளியிடுவதன் மூலம் நடிகர் சூர்யா தவறான முடிவை எடுத்துவிட்டார் என்று திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது.
இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார்.
ஜாக்கி ஷெராப், கருணாஸ், தெலுங்கு நடிகர் மோகன் பாபு முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

தனியார் விமானம்
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இதற்காக தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

முன்னணி ஹீரோ
இந்தப் படத்தை ஏப்ரல் இறுதி அல்லது மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கொரோனா மொத்த திட்டத்தையும் சிதைத்து விட்டது. இந்நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று நடிகர் சூர்யா அறிவித்தார். தமிழில் முன்னணி ஹீரோ ஒருவரின் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தியது.

மனசாட்சியுடன்
இதுபற்றி நடிகர் சூர்யா, திரையரங்குகளில் தற்போது திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளது. கடுமையான உழைப்பில் தயாரான படங்களை, சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதனால் ஒரு தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

திருப்பூர் சுப்ரமணியம்
இந்நிலையில் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்ரமணியம் நடிகர் சூர்யாவை விளாசி இருக்கிறார். அவர் கூறும்போது, கொரோனா வைரஸ் காரணமாக சினிமா தயாரிப்பாளர்கள் கஷ்டத்தை சந்தித்து வரும் நேரத்தில் நடிகர் சூர்யா இப்படியொரு முடிவை அறிவித்திருக்கிறார்.

தவறான முடிவு
சினிமா துறை கடும் நெருக்கடியான சூழலில் இருக்கும்போது, எங்களை கவனத்தில் கொள்ளவில்லை. சூர்யாவின் இந்த முயற்சி, தியேட்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கான வழியாக இருக்கிறது. சூர்யா லாபத்தை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். அவர் வளர்ச்சிக்கு ஏணியாக இருந்த தியேட்டர்களை அவர் கீழே தள்ளிவிட்டுவிட்டார். இதன் மூலம் அவர் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











