ஜனநாயகன் ஓடிடியில் வருமா?.. அந்த விஷயம் படத்தை பாதிக்குமா?.. திருப்பூர் சுப்ரமணியம் ஓபன் டாக்

சென்னை: ஜனநாயகன் படத்தை நடக்கும் பிரச்னைகள் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் ஆறாத வடுவை கொடுத்திருக்கிறது. நேற்று முன்தினத்தோடு அந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்றுதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் உயர் நீதிமன்றமோ மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என கூறிவிட்டது. எனவே இனி எப்போது வழக்கு விசாரணைக்கு வந்து, படம் ரிலீஸாகும் என்ற கவலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஜனநாயகன் படம் பற்றி பேசியிருக்கிறார்.

விஜய் - ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் ரிலீஸாகவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்துக்கு சென்றது கேவிஎன் நிறுவனம். முதலில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, 'படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கை குழு வாரியம் மேல்முறையீடு செய்தது.

Tiruppur Subramaniam Open talks about Vijay s Jana Nayagan Release Issue
Photo Credit:

மீண்டும் உயர் நீதிமன்றம்: அதனை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இதை எதிர்பார்க்காத பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீலுக்கு சென்றது. ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தங்களுக்கு விருப்பமில்லை என கூறி தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற வேகத்திலேயே சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வந்தது. இங்கு விசாரணையை முடித்த நீதிபதிகள் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்கள்.

என்ன தீர்ப்பு?: அந்தத் தீர்ப்பில், 'இந்தப் படத்தில் மதத்தை புண்படுத்தும் காட்சிகள் இருக்கின்றன. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும்' என ட்விஸ்ட் வைக்கப்பட்டது. எப்படியும் 27ஆம் தேதியோடு இந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்துவிடும்; பிப்ரவரி முதல் வாரத்தில் படம் ரிலீஸாகிவிடும் என்றெல்லாம் கனவு கண்ட விஜய் ரசிகர்களுக்கு; நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு தலையில் இடியை இறக்கியது என்றே சொல்ல வேண்டும். இனிமேல் எப்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து, படம் ரிலீஸாகும் என தெரியாமல் குழம்பி போயிருக்கிறார்கள்.

பட நிறுவனத்தின் முடிவு?: நீதிமன்றத்தை நம்பினால் இனி வேலைக்கு ஆகாது என உணர்ந்திருக்கும் கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு; மறு தணிக்கைக்கு செல்லும் முடிவை எடுத்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இது ஒருபக்கம் இருக்க பேசாமல் நேரடியாக ஓடிடியிலேயே வெளியிட்டுவிட்டால் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

ஓடிடியில் வருமா?: அந்தப் பேட்டியில் அவர், "ஜனநாயகன் திரைப்படம் கண்டிப்பாக ஓடிடியில் ரிலீஸாகாது. ஏனெனில் இது பெரிய படம். பட்ஜெட்டும் பெரிது. அதுமட்டுமின்றி தியேட்டர்கள் ஸ்க்ரீனை மனதில் வைத்துதான் பல வேலைகளை படத்தில் செய்திருப்பார்கள். அதில் பார்க்கும் அனுபவம் நிச்சயம் ஓடிடியில் கிடைக்காது. எனவே தியேட்டரில்தான் அவர்கள் வருவார்கள். என்ன ஒன்று பொங்கலுக்கு ரிலீஸாகியிருந்தால் வரிசையாக வந்த விடுமுறை படத்துக்கு பெரிய உதவி செய்திருக்கும். அதேபோல் மாணவர்களுக்கு வரும் தேர்வு படத்தை பாதிக்குமா என்றும் கேட்கிறார்கள்.அதெல்லம் பெரிதாக பாதிக்காது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X