வேட்டையன் பொதுமக்களுக்கான படம்.. நல்ல கலெக்ஷன் அள்ளுது.. திருப்பூர் சுப்ரமணியம் சொல்றதை கேளுங்க!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த வாரம் வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பாக தியேட்டர்களில் ஓடி வருவதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடித்த லியோ மற்றும் செப்டம்பர் மாதம் வெளியான கோட் படங்களுக்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் நெகட்டிவிட்டியை பரப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கிறோம் என விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி வேட்டையன் படத்தை டிசாஸ்டர் என ஹாஷ்டேக் போட்டும் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் கொடுத்தும் வருகின்றனர்.

கோட் படம் அளவுக்கு வசூல் ரீதியாக வேட்டையன் வெற்றி பெறவில்லை என்றும் வேட்டையன் தோல்வி படம் என்றும் விஜய் ரசிகர்கள் சொல்லி வருவது சுத்த பொய் என்றும் இது மக்களுக்கான படம் என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
மக்களுக்கான படம்: ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வேட்டையன் படத்தை எடுத்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படம் கூட ரசிகர்களுக்கான படம் தான். ஆனால், வேட்டையன் திரைப்படம் மக்களுக்கான படம் நிச்சயம் பொதுமக்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
ஜெயிலரை விட சூப்பர்: வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் படத்தை விட சிறப்பாக உள்ளது. நிச்சயம் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். விஜய் நடித்த கோட் படத்துடன் ரஜினிகாந்த் படத்தை கம்பேரே பண்ணக் கூடாது என்றும் ஜெயிலரை விட இந்த படம் சூப்பராக உள்ளது. அடுத்த படம் இதை விட சிறப்பாக வருகிறதா இல்லையா என்று தான் பார்க்க வேண்டும். சோஷியல் மீடியாவில் வியூஸ்க்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம் என அவர் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
லைகாவுக்கு வெற்றி: குறைந்த பொருட்செலவில் வேட்டையன் படத்தை எடுத்து மிகப்பெரிய வசூல் லாபத்தை லைகா நிறுவனம் பெறப்போகிறது என்றும் இந்த படம் லைகா நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படம் தான் என்றும் விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் கருத்துக்களை பரப்பினாலும் பொதுமக்கள் படத்தை கொண்டாட ஆரம்பித்தால் ஜெயிலர் படத்தின் வசூலை விட அதிகரிக்கும் என திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் போட்டி: புதிதாக வரும் படங்கள் நல்ல படமா? இல்லையா? என்பதை பார்த்து தியேட்டருக்கு ரசிகர்கள் வர வேண்டும். அந்த படம் எவ்வளவு வசூல் செய்தது? இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்றெல்லாம் யோசித்துக் கொண்டு எந்தவொரு ரசிகனும் படத்திற்கு வரமாட்டான். டிக்கெட்டுக்கு கொடுக்கிற காசுக்கு படம் வொர்த்தா என்றால் வேட்டையன் திரைப்படம் 100 மடங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தியே வழி அனுப்பும். படத்தில் ஏகப்பட்ட நல்ல விஷயங்களும் நல்ல கருத்துக்களையும் ரஜினிகாந்த் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விஷயங்களை வைத்து ஞானவேல் இயக்கியுள்ளார் என பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர் விடுமுறை இருப்பதால் முதல் 4 நாட்களில் 200 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











