விஜய் போயிட்டா சினிமா இல்லையா?.. வேட்டையன் படம் ஜெயிலர் வசூலை விட அதிகம் அள்ளும்.. பிரபலம் பளிச்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு செல்ல உள்ள நிலையில் தமிழ் சினிமா படுத்துவிடும் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
புதிய தியேட்டர் திறப்பு விழாவில் பங்கேற்ற திருப்பூர் சுப்ரமணியம் வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் பட வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என்றும் கூறினார்.

என்னதான் ஓடிடிக்கள் வந்தாலும் தியேட்டரில் பார்க்கும் வசதியும் எக்ஸ்பீரியன்ஸும் வீட்டில் பார்க்கும் போது கிடைக்கவே கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவை பாதிக்குமா?: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது என திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். ஆனால், விஜய் தளபதி 69 படத்துக்குப் பிறகு முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ள நிலையில் சினிமாவுக்கு வர மாட்டார் எனக் கூறி வரும் நிலையில் அதனால் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு வரும் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
விஜய் அஜித்துக்குப் பிறகு: இந்நிலையில் அது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருப்பூர் சுப்ரமணியம் அப்படி எல்லாம் எந்த ஒரு பாதிப்பும் வராது என்றும் எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு யார் வருவாய் என எதிர்பார்த்த போது ரஜினிகாந்த் கமல்ஹாசன் வந்தனர். அதன் பின்னர் விஜய் அஜித் வந்தனர் அப்படி இவர்களுக்கு பிறகும் அடுத்தடுத்த நடிகர்கள் ரசிகர்களை கவர்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றார்.

பான் இந்தியா படங்கள்: இப்போது விஜய் படங்களை விட பான் இந்தியா படங்கள் அதிக அளவில் தியேட்டரில் வசூலை குவித்து வருகின்றன. மொழி கடந்து நடிகர்கள் மற்ற மாநில ரசிகர்களையும் கலந்து வரும் நிலையில், சினிமா மற்றும் தியேட்டர் தொழில் எந்த வகையிலும் பாதிப்பை சந்திக்காது என்றும் கூறியுள்ளார்.
ஜெயிலர் வசூலை விட: த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் ஓடிக் கொண்டிருப்பதாகவும் நிச்சயம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தின் வசூலை விட வேட்டையன் திரைப்படம் அதிக வசூலை அள்ளும் என்பது உறுதி என்றும் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











