twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா கால புதுமை.. அனைத்து நடிகர்களும் பங்கு பெறும் திரைப்படம்.. திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்!

    By
    |

    சென்னை: முன்னணி நடிகர்கள் சதவிகித அடிப்படையில் சம்பளம் வாங்கும் முறைக்கு மாற வேண்டும் என்று பிரபல வினியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

    Recommended Video

    Ponmagal Vandhal Director latest | OTT platform • Surya, Jothika, JJ. Fedrick

    இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: இந்த கொரோனா காலத்துல ஏதாவது புதுமையா பண்ணணும்னு சினிமாவில் அதிக அனுபவம் உள்ள பிரமிட் நடராஜன் என்னிடம் பேசினார்.

    அவர் பேசியதும் எனக்கு முதலில் தோன்றியது ஆர்.பி.சவுத்ரிதான். அதனால் அவரிடம் இதுபற்றி பேசினேன்.

    படுக்கையில் ஆடையே இல்லாமல் படு ஹாயாக கிக்கேற்றிய டூப் ஐஸ்வர்யா ராய்.. விழிபிதுங்கும் நெட்டிசன்ஸ்!படுக்கையில் ஆடையே இல்லாமல் படு ஹாயாக கிக்கேற்றிய டூப் ஐஸ்வர்யா ராய்.. விழிபிதுங்கும் நெட்டிசன்ஸ்!

    பிரமிட் நடராஜன்

    பிரமிட் நடராஜன்

    அதாவது நடிகர்கள், இயக்குனர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குறவங்க சதவிகித அடிப்படையில் சம்பளம் வாங்கணும்னு அப்படிங்கறது பத்தி பேசினோம்னு சொன்னேன். இதை வச்சு படம் பண்ணலாம்னு நினைகிறோம்னு சொன்னேன். நல்ல ஐடியாதான், செய்யலாம் என்றார். உடனே நடராஜன் சார், மரியாதைக்குரிய இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்ட்ட பேசினார். அவர், சதவிகித அடிப்படையில சம்பளம் வாங்க ரெடின்னு ஒத்துக்கிட்டார்.

    நடிகர் சத்யராஜ்

    நடிகர் சத்யராஜ்

    பிறகு, தாடி வெங்கட் அருமையான கதை ஒன்றை சொன்னார். அதுல எல்லா நடிகர்களுக்கும் கேரக்டர் இருக்கு. இதை கே.எஸ்.ரவிகுமாரும் ஆர்.பி.சவுத்ரியும் கேட்டுட்டு நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க. முக்கியமான கேரக்டர்ல சத்யராஜை நடிக்க வைக்கலாம்னு பேசினோம். அவரும் சதவிகித அடிப்படையில சம்பளம் வாங்க ஒத்துக்கிட்டார். பிறகு கவுரவ வேடங்கள்ல நடிக்க, விஜய் சேதுபதியும் பார்த்திபனும் ஒத்துக்கிட்டாங்க. இன்னும் சில நடிகர்கள்கிட்ட பேச்சிட்டு இருக்கோம்.

    நேர்மையான கணக்கு

    நேர்மையான கணக்கு

    இதுல, வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் உண்டு. இதுக்கு பட்ஜெட் ஒன்றரை கோடி, அதிகபட்சம் 2 கோடி ரூபாய்ல எடுத்திடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இந்தப் படத்தை நேர்மையான கணக்கு வழக்குகளோட, பண்ண போறோம். படத்தை நாங்களே தயாரிக்க முடியும். ஆனா, இதுல புதுமையா என்ன பண்ணலாம்னா, இந்த 2 கோடியை 200 பங்குகளா பிரிச்சுக் கொடுக்கலாம்னு சிலர் ஐடியா சொன்னாங்க.

    தியேட்டருக்கு மட்டும்

    தியேட்டருக்கு மட்டும்

    ஒரு பங்கு ஒரு லட்சம் ரூபாய். இதை, திரைத்துறையை சேர்ந்தவங்களுக்கு மட்டும் கொடுக்கணும். எத்தனை பேர் வாராங்களோ, அத்தனை ஷேர் கொடுக்கலாம். இல்லைன்னா, நாங்களே பண்ணலாம்னு பேசினோம். இப்படி ஒரு முறையில் இந்தப் படத்தை ஆர்மபிக்கிறோம். அதிகப்பட்சம் 60 நாள்கள்ல படத்தை முடிச்சு தியேட்டருக்கு கொண்டு வரணும்னு பேசியிருக்கோம். இந்த படம் தியேட்டருக்கு மட்டும்தான்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    நூறு நாள்கள் கழிச்சுதான் ஓடிடி-யில கொடுப்போம். இதுல கவுரவ தோற்றத்துல நடிக்க ஒப்புக்கொண்ட பார்த்திபன், விஜய் சேதுபதிக்கும் நன்றி. பிரமிட் நடராஜன் சார்தான் இதை இன்சார்ஜ் எடுத்து பண்ணப் போகிறார். கம்யூட்டரைஸ்ட் டிக்கெட் உள்ள தியேட்டர்களுக்கு மட்டும்தான் இந்தப் படத்தை கொடுக்க போறோம்.

    எத்தனை டிக்கெட்

    எத்தனை டிக்கெட்

    இதுக்காக சூப்பர் குட் ஆபிஸ்ல ஒரு சர்வரை வைக்க இருக்கிறோம். திருநெல்வேலில ஒரு டிக்கெட் கொடுத்தீங்கன்னா, இங்க தகவல் வர்ற மாதிரி அது இருக்கும். எத்தனை டிக்கெட் போயிருக்குன்னு இங்கயே பார்த்துக்கலாம். இன்னைக்கு 80 சதவிகித தியேட்டர்கள் கம்ப்யூட்டரைஸ்ட் ஆயிடுச்சு. அதனால முழுக்க நேர்மையான முறையில இந்தப் படத்தை எடுத்து முடிவு செய்திருக்கிறோம்.

    நடிகர் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த்

    சம்பளத்தை சதவிகித முறையில வாங்கறதுக்கு உதாரணமாக இந்த படம் இருக்கட்டும்னு முடிவு பண்ணியிருக்கிறோம். சதவிகித அடிப்படையில சம்பளம் வாங்கறதை ஆரம்பிச்சு வச்சவர் நடிகர் ரஜினிகாந்த். 'அண்ணாமலை' படத்துக்கு சம்பளமா என்.எஸ்.சி ஏரியாவை வாங்கிக்கிட்டார். அந்த முறை தொடர்ந்திருந்தால் தமிழ் சினிமா இப்ப எங்கேயோ போயிருக்கும்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    மீண்டும் அந்த முறையை தொடங்கி வைப்போம். இது சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் வெளியாகும். இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் எடுத்து வைத்துள்ள படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கு எதையாவது செய்வீர்கள் என்று பார்த்தால், இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்களே என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Tiruppur subramanian says, they have planned to make a movie on sharing basis
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X