லியோ படம் எடுக்கவே நான் தான் பணம் கொடுத்தேன்.. லலித் குமாரை விளாசி எடுத்த திருப்பூர் சுப்பிரமணியன்!
சென்னை: லியோ திரைப்பட பஞ்சாயத்து ரிலீஸுக்கு முன்பாக இருந்ததை விட ரிலீஸுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ளது. லலித் குமார் யாரு? எப்படிப்பட்ட ஆளு? என அனைத்தையும் திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டியில் புட்டு புட்டு வைத்துள்ளார்.

மேலும், நான் அவரிடம் டிஸ்ட்ரிபியூஷன் கேட்டேனா? இல்லை அவர் என்னிடம் டிஸ்ட்ரிபியூட் பண்ண சொன்னாரா என சைபர் கிரைமில் புகார் கொடுத்து உண்மையை தெரிந்து கொள்வோம் என விளாசி உள்ளார்.
லியோ படம் உருவாக லலித் குமார் தன்னிடம் தான் வட்டிக்கு பல கோடி பணம் வாங்கி படத்தையே எடுத்தார் என்றும் பகீர் கிளப்பி உள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியன் பற்றி லலித் குமார்: லியோ படத்திற்கு பேராசை பிடித்து லலித் குமார் 80 சதவீதம் ஷேர் கேட்டார் என்று யூடியூப்களில் பேட்டி அளித்த நிலையில், திருப்பூர் சுப்பிரமணியன் சொல்வதெல்லாம் பொய் என்றும் கோயமுத்தூர் ஏரியா டிஸ்ட்ரிபியூஷனை அவருக்கு கொடுக்காத காண்டில் பேசுகிறார் என லலித் குமார் நேற்று வெளிப்படையாக பேசிய நிலையில், தற்போது அதற்கு திருப்பூர் சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
லியோவுக்கு பல கோடி கொடுத்தேன்: காஷ்மீரில் இருந்து கொண்டு லியோ பட ஷூட்டிங்கிற்காக 2 மணி நேரத்தில் 2.5 கோடி பணம் லலித் கேட்டார். 24 சதவீத வட்டிக்கு லலித்துக்கு பணம் கொடுத்தேன். அதன் பின்னர் 10 கோடி ரூபாய் பணம் கேட்டார், அதையும் கொடுத்தேன். கடைசியாக ஒரு 8 கோடி பணம் கேட்டார் அந்த பணத்தை படம் ரிலீஸ் ஆக சில நாட்களுக்கு முன்னர் தான் கொடுத்தார்.
எந்தவொரு செக்யூரிட்டியும் இல்லாமல் 10 கோடி பணத்தை கொடுக்கும் போதே தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை அடித்து வாங்கியிருக்க என்னால் முடியாதா? ஆனால், நான் அதெல்லாம் வேண்டாம் என இருந்தேன். இனிமேல் லலித் குமார் பண்ண அத்தனை விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தப் போகிறேன் எனக் கூறி அதிர வைத்துள்ளார்.

முற்றிய மோதல்: லலித் குமார் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் இடையே முற்றிய மோதல் காரணமாக இனிமேல் லலித் குமார் தயாரிக்கும் படங்கள் எல்லாம் ஸ்ரீசக்தி சினிமாஸுக்கு கொடுக்க மாட்டாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இந்த பிரச்சனை எங்கே போய் முடியப் போகுது என்றும் லியோ படமும் நடிகர் விஜய்யும் தான் லலித் குமாரால் அசிங்கப்பட போவது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











