Tirupur Subramaniam: ப்ளூ சட்டை மாறன் சொன்னது வருத்தமா இருக்கு.. திருப்பூர் சுப்பிரமணியம் ஃபீலிங்!

சென்னை: திரையரங்க சங்க தலைவராக இருந்து வந்த திருப்பூர் சுப்பிரமணியம் நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு எதிராக பல யூடியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்து வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபம் கிளம்பியது.

தீபாவளி ரிலீஸான சல்மான் கானின் டைகர் 3 படம் ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், ஒரே நாளில் வசூலை அள்ளி விடலாம் என நினைத்து ஸ்ரீசக்தி சினிமாஸில் காலை 7 மணிக்கே விதிகளை மீறி காட்சிகள் திரையிடப்பட்டது.

அதனை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் ட்வீட் போட ஆரம்பித்த நிலையில், ப்ளூ சட்டை மாறனும் திருப்பூர் சுப்பிரமணியத்தை வச்சு விளாசினார்.

Tirupr Subramaniam feels for Blue Sattai Maran troll on him

திருப்பூர் சுப்பிரமணியம் ராஜினாமா: நடிகர் விஜய் நடித்த லியோ படத்துக்கு அதிகாலை 7 மணி காட்சி கோரி தயாரிப்பாளர் லலித் குமார் பல முறை முறையிட்டும் கடைசி வரை முடியவே முடியாது என தமிழ்நாடு அரசு மறுத்து விட்டது. மேலும், 7 மணி காட்சிக்கு அனுமதிக்க கூடாது என திருப்பூர் சுப்பிரமணியமும் பேசியிருந்தார். இந்நிலையில், அவரது திரையரங்கிலேயே விதிமீறல் நடந்ததை நோட் பண்ண தளபதி ரசிகர்கள் போட்டு பொளந்த நிலையில், தனது பதவியையே ராஜினாமா செய்து விட்டார் திருப்பூர் சுப்பிரமணியம்.

ப்ளூ சட்டை மாறன் மேல வருத்தம்: தனது தியேட்டர் ஊழியர்கள் தெரியாமல் காலை காட்சி போட்டு விட்டதாகவும் அந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாது என்றும் ஆனால், நடந்தது தவறு தான் என மன்னிப்பு கோரிய திருப்பூர் சுப்பிரமணியம் மற்ற யூடியூபர்கள் சொன்னது கூட எனக்கு வருத்தமில்லை. ப்ளூ சட்டை மாறன் ஒரு நேர்மையான யூடியூபர் அவரே என்னை பற்றி அவதூறாக சொன்னது தான் ரொம்பவே வருத்தமடைய செய்தது என புலம்பி உள்ளார்.

Tirupr Subramaniam feels for Blue Sattai Maran troll on him

தனிப்பட்ட பகை இல்லை: அவரது அந்த பேட்டியை பார்த்து ஃபீல் பண்ண ப்ளூ சட்டை மாறன் "புரிதலுக்கு நன்றி திருப்பூர் சுப்ரமணியம் அவர்களே.

தனிப்பட்ட முறையில் உங்களிடம் எந்த எதிர் நிலைப்பாடும் எனக்கில்லை. திரையரங்குகளில் நடைபெறும் தவறுகள் மற்றும் விதிமீறல்களை சுட்டிக்காட்டுவதுதான் அடிப்படை நோக்கம்." என தற்போது ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X