பீஸ்ட் படத்தை பார்க்க ஊழியர்களுக்கு லீவு... பிரபல நிறுவனம் செஞ்ச வேலையை பாருங்க!
திருப்பூர் : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் நாளைய தினம் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்கள் அடித்து புடித்து டிக்கெட்டுகளை புக்கிங் செய்து வருகின்றனர். நாளைய தினம் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் லீவுக்காகவும் அலை மோதி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த முன்னணி நிறுவனம் செய்துள்ள விஷயம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்கள் முன்னதாக டிக்கெட் புக்கிங்கை செய்து பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை பார்க்க ஆர்வமாக உள்ளனர். எத்தனை ஹீரோக்கள் கோலிவுட்டில் இருந்தால் விஜய்க்கு உள்ள க்ரஷ் கணக்கில் அடங்காதது.

ரசிகர்கள் விருப்பம்
அதிலும் சமீப ஆண்டுகளில் இவர் மீதான ரசிகர்களின் விருப்பம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ரசிகர்களின் இந்த விருப்பம், ஆர்வத்திற்கு விஜய் தொடர்ந்து தீனிப் போட்டு வருகிறார். சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.

சிறப்பான நடனம்
அவருக்கு எப்போதுமே நடனம் சிறப்பாக வரும். அதேபோல அவரது படங்களில் பாடல்களில் நடனம் சிறப்பாக அமையும். பாடல்கள் மற்றும் அதில் வரும் நடனங்களுக்காக விஜய் மிகவும் மெனக்கெடுவார். தற்போது பீஸ்ட் படத்திலும் சிறப்பான இரண்டு பாடல்களும் அதில் விஜய், பூஜா ஹெக்டேவின் சிறப்பான நடனமும் காணப்படுகிறது.

யூடியூபில் ட்ரெண்டிங்
இந்தப் பாடல்கள் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன. ரசிகர்கள் இந்தப் பாடல்களையும் சமீபத்தில் வெளியான தீம் பாடல் மற்றும் ட்ரெயிலரையும் கொண்டாடி வருகின்றனர். இதன் வியூஸ்கள் கோடிக்கணக்காக உள்ளது. தொடர்ந்து தற்போது படத்தின் ப்ரமோக்களும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

அலைமோதும் ரசிகர்கள்
படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை பார்க்க விஜய் ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். டிக்கெட் விற்பனை வானத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த சர்வதேச நிறுவனம் ஒன்று பீஸ்ட் படத்திற்காக செய்துள்ள செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக தன்னுடைய ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது அந்த நிறுவனம்.

பீஸ்ட் படத்தை பார்க்க விடுமுறை
படம் நாளைய தினம் ரிலீசாக உள்ள நிலையில், நாளைய தினம் விடுப்பு அளிக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு காரணங்களை கூறி ஊழியர்கள் விடுப்பு கேட்பதை தவிர்க்கும்வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Recommended Video

ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுகள்
மேலும் ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகளையும் அந்த நிறுவனம் இலவசமாக கொடுத்துள்ளது. இதனிடையே அந்த நிறுவனத்தின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், நாளைய தினம் மிகவும் மகிழ்ச்சியாக படத்தை பார்க்க தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











