மாஸ்டர் படத்துக்காக மக்கள் வயிற்றில் அடித்தேன்.. செஞ்ச தப்பை ஒப்புக் கொண்ட திருப்பூர் சுப்பிரமணியம்!

சென்னை: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் 50 சதவீதம் மட்டுமே இருக்கைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு டிக்கெட் விலை 350 ரூபாய்க்கு விற்று பெரிய தப்பை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.

Tirupur Subramaniam reveals how he hiked ticket price for Vijays Master movie

சினிமா ஃபைனான்ஸியராக செயல்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீசக்தி சினிமாஸ் தியேட்டர் ஓனர் திருப்பூர் சுப்பிரமணியம் தன்னை பற்றி லலித் குமார் அவதூறாக பேசியது பொறுக்க முடியாத நிலையில், பல ரகசியங்களை அம்பலப்படுத்த துணிந்து விட்டார்.

லியோ படத்தின் பஞ்சாயத்து மட்டுமின்றி தனக்கும் லலித்துக்கும் இடையே மாஸ்டர் பட சமயம் நடந்த டீலிங்கும் வெளியே வந்துள்ளது.

மாஸ்டர் படத்துக்கு 350 ரூபாய் டிக்கெட்: தன்னுடைய தியேட்டரில் விஜய் நடித்த திருமலை படத்திற்கு மட்டும் தான் ரசிகர்கள் காட்சி வெளியிட்டேன். அப்போ விஜய் ரசிகர்கள் தியேட்டர் கண்ணாடியை உடைத்த நிலையில், அதன் பின்னர் எந்த படத்துக்கும் ரசிகர் மன்ற ஷோ கொடுக்கவில்லை என்றும் தன்னுடைய தியேட்டரில் அனைத்து படத்துக்கும் சரியான டிக்கெட் தான் விற்பனை ஆகிறது என்றும் மாஸ்டர் படத்துக்கு மட்டுமே 350 ரூபாய்க்கு டிக்கெட் விற்றோம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

மக்கள் தலையில் ஏற்றினேன்: லலித் குமாருக்காக மாஸ்டர் படம் வெளியிட்ட போது ஒரு டிக்கெட் விலை 350 ரூபாய்க்கு விற்றேன் என்றும் மக்கள் தலையில் தான் அந்த சுமையை ஏற்றினேன் என்றும் அதுதான் என் வாழ்நாளிலேயே லலித்துக்காக நான் செய்தது தான் பெரிய தப்பு என்றும் வெளிப்படையாக தன்னுடைய குற்றத்தையும் திருப்பூர் சுப்பிரமணியம் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒரு டிக்கெட்டுக்கு பதிலாக மாஸ்டர் படம் வெளியான போது 2 சீட்டுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் தலையில் கட்டியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன் என்பது தெரிந்த நிலையில், மறைமுகமாக சினிமாவில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து என்ன என்ன மோசடிகளை எல்லாம் இவர் செய்திருப்பார் என்றும் விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

82 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை: சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் 10 நாட்களுக்கு 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆனதாக அறிவித்துள்ள நிலையில், திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டரில் இதுவரை லியோ திரைப்படம் 82 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக திருப்பூர் சுப்பிரமணியன் சொல்லி உள்ளார்.

Tirupur Subramaniam reveals how he hiked ticket price for Vijays Master movie

படம் பார்க்க ஆளே வரவில்லை என்றும் தியேட்டர்கள் காத்து வாங்குது என ரஜினி ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் லியோ டிசாஸ்டரை டிரெண்ட் செய்து வந்த நிலையில், தியேட்டர் ஓனர்கள் எல்லாம் லியோ படத்திற்கு மக்கள் கூட்டம் வந்த உண்மைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X