twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிர்ச்சி.. பிரபல டைட்டானிக் பட நடிகர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.. சோகத்தில் ஹாலிவுட்

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் டேவிட் வார்னர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    உலகளவில் புகழ்பெற்ற ஓமன் பேய் படத்தில் வில்லனாக நடித்தவர் டேவிட் வார்னர். ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    டாக்டர் வூ, மேட் டாக்ஸ் உள்ளிட்ட அமெரிக்க டிவி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

    ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட்.. ஹின்ட் கொடுத்த ராஜு.. கலக்கல் ப்ரமோ வெளியீடு! ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியின் ஸ்பெஷல் கெஸ்ட்.. ஹின்ட் கொடுத்த ராஜு.. கலக்கல் ப்ரமோ வெளியீடு!

    டேவிட் வார்னர் காலமானார்

    டேவிட் வார்னர் காலமானார்

    1941ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி பிறந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் வார்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. இன்னும் 3 நாட்களில் பிறந்தநாளை கொண்டாட வேண்டிய நிலையில், புற்றுநோய் பாதிப்பு காரணமாக டேவிட் வார்னர் உயிரிழந்தது ஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ஓமன் பட வில்லன்

    ஓமன் பட வில்லன்

    1976ம் ஆண்டு வெளியான தி ஓமன் படத்தில் வில்லனாக மிரட்டியவர் டேவிட் வார்னர். 1962ம் ஆண்டு 'வி ஜாய்ன்ட் தி நேவி' படத்தின் மூலம் நடிகராக ஹாலிவுட்டில் அறிமுகமான இவர், பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் அசத்தி உள்ளார். ஸ்டார் டிரெக், தி ஐலாண்ட், டிரான், ப்ளூ டர்னாடோ உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

    டைட்டானிக் நடிகர்

    டைட்டானிக் நடிகர்

    ஐஸ்க்ரீம் மேன், நேக்கட் சோல்ஸ், ஸ்க்ரீம் 2 உள்ளிட்ட பல பிரபல படங்களில் நடித்துள்ள இவர் 1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட காதல் காவியமான டைட்டானிக் படத்தில் ஸ்பைசர் லவ்ஜாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக ஸ்க்ரீன் கில்ட் விருதுக்காகவும் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சோகத்தில் ஹாலிவுட்

    சோகத்தில் ஹாலிவுட்

    கடைசியாக 2018ம் ஆண்டு வெளியான மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த டேவிட் வார்னர் தற்போது காலமான நிலையில், ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகமும் ஒரு மூத்த நடிகரை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    English summary
    Titanic Actor David Warner passes away due to Cancer related issues. 80 year old Hollywood actor acted as a villain in many movies. The Omen and Star Trek actor death news shocks hollywood fans and celebs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X