சிம்பு ஜோடியாக தமன்னா… அமீர் – அனிருத் இணையும் மெர்சல்

By Mayura Akilan

அமீர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மெர்சல் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐ படத்தில் மெர்சலாயிட்டேன் பாடலைப் பாடிய அனிருத் மெர்சல் படத்தில் ரசிகர்களை மெர்சலாக்கும் வகையில் இசையைத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இனி வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுப்பேன் என சிம்பு கூறியிருக்கிறார். அதற்கேற்றார் போல அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருகிறார்.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

நீண்ட இழுபறிக்குப் பின்னர் ‘வாலு' வெளியாகிவிட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு'. விரைவில் இந்தப்படத்தில் ஆடியோ வெளியீட்டு நடைபெற உள்ளதாக சிம்பு கூறியுள்ளார்.

செல்வராகவன் படம்

செல்வராகவன் படம்

இதனைத் தொடர்ந்து செல்வராகவனின் ‘கான்', கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் இரவு பகலாக நடித்து வருகிறார் சிம்பு.

அமீர் உடன் சிம்பு

அமீர் உடன் சிம்பு

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அமீர் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். தற்போது இப்படத்திற்கு ‘மெர்சல்' எனப்பெயரிட்டுள்ளனர்.

சிம்பு – தமன்னா

சிம்பு – தமன்னா

இப்படத்தில் முதன்முறையாக சிம்புவுடன் தமன்னா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படம் ரொமான்டிக் ஆக்சன் படமாக உருவாகிறதாம். இப்படத்திற்காக சிம்புவும் அனிருத் இணைந்து ஒரு பாடலை பாடவுள்ளனர்.

மெர்சலாக்குவாரா அனிருத்

மெர்சலாக்குவாரா அனிருத்

வட சென்னையில் ‘மெர்சல்' என்ற வார்த்தை பிரபலமானது. ஷங்கர் இயக்கி ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ‘ஐ' படத்தில் இடம்பெற்ற ‘மெர்சலாயிட்டேன்...' என்ற பாடலில் இருந்து இப்பட தலைப்பை எடுத்துள்ளனர். விக்ரம் நடித்திருந்த இப்பாடலை அனிருத் பாடியிருந்தார். பாடலைப்போல படத்தின் இசையையும் மெர்சலாக்குவாரா அனிருத் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X