Bigil: பிகில் ஒரு பக்கா மெட்ராஸ் படம்... எப்டின்னு கேட்டுகுறீங்களா... டைட்டிலே சொல்லுதே!
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு பகில் என பெயர் வைத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பிகில் ஒரு பக்கா மெட்ராஸ் படம் என்பதை டைட்டிலே சொல்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
பிகில் படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகில் பர்ஸ்ட் லுக்
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புட் பால் கோச்சான இளைய விஜய், கையில் பாலுடன் அப்பாவுக்கு பின்னால் நிற்கிறார். அப்பா விஜய்யோ காலா ரஜினி ஸ்டைலில் காவி வேட்டி, கருப்பு சட்டை என செம கெத்தாக அமர்ந்திருக்கிறார். அவர்களுக்கு முன்னால் ஒரு கத்தி, மரக்கட்டையில் செருகி வைக்கப்பட்டுள்ளது.

அப்பா தாதா
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அப்பா விஜய் ஒரு தாதா என்பதும், மகன் விஜய் ஒரு கால்பந்தாட்ட வீரர் என்பதும் புரிகிறது. விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

பக்கா மெட்ராஸ் படம்
படத்தின் தலைப்பு பிகில் என வைக்கப்பட்டுள்ளது. விசில் என்பதை தான் மெட்ராஸ் பாஷையில் பிகில் என்பவர். எனவே பிகில் ஒரு பக்கா மெட்ராஸ் படம் என்பது தெளிவாகிறது.

வடசென்னையின் கால்பந்து
குறிப்பாக வடசென்னையில் தான் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்திலும், அந்த மக்களில் வாழ்வியலை புரியவைக்கும் வகையில் கால்பந்து விளையாட்டு ஒரு முக்கிய களமாக இடம்பெறும். அந்த வகையில் பிகில் படம் வடசென்னையை மையப்படுத்திய படம் என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications











