மதுபானக் கடை இயக்குநரின் அடுத்த படம்... டைட்டில் லுக் வெளியீடு
சென்னை : மதுபானக் கடை படம் மூலம் கோலிவுட்டில் கவனிக்கத்தக்க இயக்குநராக அறிமுகம் ஆனார் கமலக்கண்ணன்.
இந்தப் படத்தில் கதையே இல்லாமல் காட்சிகளை கொண்டு படத்தை வித்தியாசமாக கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது புதிய படத்தின் டைட்டில் லுக்கை அவர் வெளியிட்டுள்ளார்.

மதுபானக் கடை படம்
மதுபானக் கடை என்ற பெயரில் கடந்த 2012ல் வெளியான படத்தில் புதுமுகங்களின் துணை கொண்டு சிறப்பான திரைக்கதையுடன் படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர் கமலக்கண்ணன். மதுபானக்கடையில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக வெளிவந்தது இந்தப் படம்.

கதையே இல்லாத படம்
கதையே இல்லாமல் ஒரு கதையை இந்தப் படத்தின்மூலம் அவர் கொடுத்திருந்தார். படத்தின் ஆரம்பத்திலேயே இந்தப் படத்தில் கதை ஏதும் தென்பட்டால் அது உங்கள் கற்பனையே என்று அறிவித்து படத்தை துவக்கியிருந்தார். இதுவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வித்தியாசமான கேரக்டர்கள்
சரக்கடித்துவிட்டு சலம்பும் மனிதர்கள், புதிதாக சரக்கடிக்க வரும் இளைஞர் என்பது உள்ளிட்ட பல்வேறு கேரக்டர்களை இந்தப் படத்தில் உலவ விட்டிருந்தார். படத்தில் பேர் சொல்லும்படியாக எந்த நடிகரையும் நடிக்க வைக்காமல் புதுமுகங்களை மட்டுமே களத்தில் இறக்கியிருந்தார்.

அடுத்த படம்
இந்நிலையில் இவரது அடுத்த படைப்பாக தற்போது குரங்கு பெடல் என்ற படம் உருவாக உள்ளது. காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மிதிவண்டிப் பயணம்
மதுபானக்கடை இயக்குநரின் மிதிவண்டிப் பயணம் என்று டைட்டில் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஆர்ஜே புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்கவுள்ளது. முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்துடன் கவனத்தை ஈர்த்த கமலக்கண்ணன் இந்தப் படத்தில் ஸ்கோர் செய்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கவனம் ஈர்த்த கேரக்டர்கள்
முதல் படத்தில் வசனங்கள் சிறப்பான வகையில் கவனம் ஈர்த்தன. நாங்கள் தள்ளாடுனா தான் கவர்ன்மெண்ட் ஸ்டெடியாக இருக்கும் என்பது உள்ளிட்ட பல வசனங்கள் சிறப்பாக கையாளப்பட்டது. படத்தின் இசையை வேத் சங்கர் மேற்கொண்டிருந்தார். இசையும் காதுக்கு இதமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது குரங்கு பெடல் படமும் கவனத்தை ஈர்க்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











