ஷாருக் – அட்லீ படத்தின் அடுத்த அப்டேட்...நேற்று ஹீரோயின், இன்று டைட்டில்

மும்பை : ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட்டிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து 3 ஹிட் படங்களை கொடுத்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இவர் கடைசியாக விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தை இயக்கினார். இந்த மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனால் அட்லீயின் அடுத்த படம் யாருடன் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அட்லீ மீண்டும் விஜய்யை இயக்க போவதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது.

ஷாருக்கை இயக்கும் அட்லீ

ஷாருக்கை இயக்கும் அட்லீ

ஆனால் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட்டிற்குள் நுழைந்துள்ள அட்லீ, தனது முதல் படத்தை ஷாருக்கானை வைத்து இயக்க உள்ளார். இந்த படம் ஆக்ஷன் கதை கொண்டதாக இருக்க வேண்டும் என சமீபத்தில் தான் முடிவு செய்தனர்.

ஹீரோயின் நயன்தாராவா

ஹீரோயின் நயன்தாராவா

இந்நிலையில் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க உள்ளதாக நேற்று அப்டேட் வெளியிடப்பட்டது. இன்று அடுத்த அப்டேட்டாக படத்தின் டைட்டில் என்னவென்று முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

டைட்டில் அறிவிப்பு எப்போது

டைட்டில் அறிவிப்பு எப்போது

ஷாருக்கான் தற்போது, ஹிருத்திக் ரோஷனை வைத்து வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் முடிவடைவதற்குள் அட்லீ படத்தின் டைட்டில் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

3 ஆண்டுகளாக ஷாருக் படமில்லை

3 ஆண்டுகளாக ஷாருக் படமில்லை

பதான் படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். ஜான் ஆப்ரகாம் வில்லனாக நடிக்கிறார். கடைசியாக ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் 2018 ல் ரிலீசானது. அனுஷ்கா சர்மா, கத்ரினா கைஃப் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X