மீண்டும் பிரச்சினையில் சிக்கிய சிவா பட தலைப்பு... எம்ஜிஆர் ரசிகர்கள் கருணை காட்டுவார்களா!

பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' என பெயர் சூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை: சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு தலைப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சமீபகாலமாக எந்த படமும் கைக்கொடுக்கவில்லை. சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி அடைந்தன.

இதனால் தனது அடுத்தடுத்தப் படங்களை மிகவும் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன். அவர் வரும் படத்தின் தலைப்பான 'ஹீரோ' என்ற பெயரை விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கும் சூட்டியுள்ளதால் பிரச்சினை எழுந்துள்ளது.

தலைப்புக்கு எதிர்ப்பு

தலைப்புக்கு எதிர்ப்பு

இந்நிலையில் பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' என பெயர் சூட்ட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப்பிள்ளை' படத்தை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம்

தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம்

இதுகுறித்து அந்த நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப்பிள்ளை உள்பட தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து படங்களின் தலைப்புகளின், உரிமைகளையும் இதுவரை வேறு நபர்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிமை கோர முடியாது

உரிமை கோர முடியாது

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்து கடிதம் மூலம் தலைப்பு உரிமை காப்பு கோரி தயாரிப்பாளர் சங்கங்களுக்கு கடிதம் கொடுத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அதே நிலை தொடர்கிறது என்பதை தெரிவித்துக்கொள்வதாக விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடிதத்தில் கூறியுள்ளது.

தலைப்புக்கு சிக்கல்

தலைப்புக்கு சிக்கல்

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சிவகார்த்திகேயன் படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என பெயர் சூட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே வேறு தலைப்பை சூட்டுவது குறித்து படக்குழு யோசித்து வருகிறது. சிவகார்த்திகேயன் தயாரித்து சமீபத்தில் வெளியான படத்துக்கும் எம்.ஜி.ஆர். பாடலான "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" என பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X