அது மட்டும் நடந்தா? அடுத்த வருஷம் தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்ருவாங்க.. விஜய்யின் மாஸ்டர் பிளான்?

சென்னை: அடுத்த ஆண்டு தளபதி விஜய் அடுத்தடுத்து 3 படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் பாகுபலி 2ம் பாகத்தின் வசூலை முறியடித்து புதிய வசூல் சாதனை படைத்துள்ளது.

தளபதி 65 அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு வேற லெவல் மாஸ்டர் பிளானை நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வருஷம் இல்லை

இந்த வருஷம் இல்லை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படம் ஏப்ரலில் படப்பிடிப்பை தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி 65 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனாண்டாள் தயாரிப்பில்

தேனாண்டாள் தயாரிப்பில்

மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் தயாரிப்பில் தளபதி 66 படம் உருவாகப் போகிறது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு தாமதமாகி உள்ள நிலையில், தளபதி 66 படத்தை அட்லி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் இயக்குநர்

மாஸ்டர் இயக்குநர்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வரும் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தளபதி விஜய்க்காக ஒரு கதையை கூறியுள்ளதாகவும், தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அடுத்த ஆண்டு சம்மருக்கு தளபதி 66 வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ரிக் பிளான்

ஹாட்ரிக் பிளான்

இது மட்டுமின்றி அடுத்த ஆண்டு அடுத்தடுத்து மூன்று படங்களை வரிசையாக இறக்க தளபதி விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளன. மாஸ்டர் படத்தின் வசூல் போல மீண்டும் தியேட்டர்களில் மக்களை ஈர்த்து வசூலை குவிக்க விஜய் படங்களையே பலரும் எதிர்பார்த்து காத்திருப்பதால் இந்த அதிரடி முடிவில் விஜய் இறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

தளபதி 67 படம் அடுத்த ஆண்டு தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை டார்கெட் செய்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்து அடுத்து நடிக்கப் போகிறாரா? அல்லது வேறு ஒரு புது இயக்குநருடன் தளபதி விஜய் இணைவாரா? என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்!

சூடான சுவையான சினிமா மற்றும் தொலைக்காட்சி செய்திகளுக்கு பிலிமிபீட் தமிழ் இணையதளத்தின் டெலிகிராம் சானலுடன் இணைந்திருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X