twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பு... காலண்டர் சர்ச்சை குறித்து மனம்திறந்த ஞானவேல்

    |

    சென்னை : சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான படம் ஜெய் பீம்.

    படத்தை தசெ ஞானவேல் இயக்கியிருந்தார். தீபாவளியையொட்டி படம் கடந்த 2ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது.

    தாமரையாவது வாய் பேசுது.. நீ மிக்சர் சாப்டே ஃபைனல் போயிடுவா.. ராஜூவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !தாமரையாவது வாய் பேசுது.. நீ மிக்சர் சாப்டே ஃபைனல் போயிடுவா.. ராஜூவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் !

    இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த காலண்டர் குறித்து சர்ச்சை உருவான நிலையில், முதல் முறையாக ஞானவேல் அதுகுறித்து மனம் திறந்துள்ளார்.

    ஜெய் பீம் படம்

    ஜெய் பீம் படம்

    நடிகர் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக வேடமேற்று நடித்துள்ள படம் ஜெய் பீம். பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞராக அவர் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2ம் தேதி தீபாவளியையொட்டி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

    நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யா

    படத்தில் சூர்யாவுடன் லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் டபத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். சூர்யாவின் நடிப்பும் படத்தின் மேக்கிங்கும் சிறப்பாக அமைந்திருந்தது.

    காலண்டர் சர்ச்சை

    காலண்டர் சர்ச்சை

    இந்நிலையில் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருந்த காலெண்டர் குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து சூர்யாவிற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்டன. அவருக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து #Westandforsurya என்ற ஹேஷ்டாக்கும் வைரலானது,

    இயக்குநர் வருத்தம்

    இயக்குநர் வருத்தம்

    இந்த விவகாரம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காத இயக்குநர் தசே ஞானவேல் முதல்முறையாக தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி, பழங்குடியினர் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானதும், அதற்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    எதிர்பார்க்காத விவகாரம்

    எதிர்பார்க்காத விவகாரம்

    ஆனால் இந்த காலண்டர் குறித்த சர்ச்சை தான் எதிர்பார்க்காதது என்றும், தங்களது கவனத்தில் அது வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு ஆண்டை குறிக்கும்வகையில் அந்த காலண்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும அவர் மேலும் கூறியுள்ளார்.

    தான் மட்டுமே பொறுப்பு

    தான் மட்டுமே பொறுப்பு

    ஒரு இயக்குநராக அந்த காட்சிக்கு தான் மட்டுமே பொருப்பாக முடியும் என்றும் ஆனால் தேவையில்லாமல் சூர்யாவிற்கு இதன்மூலம் சங்கடங்கள் ஏற்பட்டது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். எந்த குறிப்பிட்ட சமூகத்தினரையும் அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் வருத்தம்

    இயக்குநர் வருத்தம்

    இந்த விஷயத்தில் மனவருத்தம் அடைந்தவர்களுக்கும் புண்பட்டவர்களுக்கும் தனது உளப்பூர்வமான வருத்தத்தையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இந்த சூழலில் தங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் அவர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

    English summary
    Director TJ Gnanavel on Jai bhim Calender controversy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X