வேட்டையன் டிரெய்லரில் அனிருத்தை அடக்கி வாசிக்க சொன்னதே இதுக்குத்தான்.. ஞானவேல் பளிச் பேட்டி!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஆண்டு ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த படம் இதுவரை ஓடிடியிலும் வெளியாகவில்லை.

படத்தோட ஹார்ட் டிஸ்க்கையே தொலைத்து விட்டு பாதி படத்தை எடுத்து தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஆடியோ லாஞ்ச் எல்லாம் வைத்து அலப்பறை செய்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

vettaiyan tj gnanavel anirudh

ஜெயிலர் படத்தில் 600 கோடி வசூல் வேட்டை நடத்திய சூப்பர் ஸ்டாரை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்தளவுக்கு செய்திருந்தார். இந்நிலையில், வேட்டையன் திரைப்படம் மீண்டும் ரஜினிகாந்தின் மைலேஜை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டிரெய்லரில் அனிருத்தின் பிஜிஎம் எல்லாம் அமைதியானதற்கு என்ன காரணம் என இயக்குநர் ஞானவேல் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஞானவேல் பேட்டி: ரத்த சரித்திரம், பயணம், தோனி, உன் சமையல் அறையில் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதி வந்த ஞானவேல் அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் பெரிதாக போகவில்லை. அதன் பின்னர், சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கினார். உலகளவில் பாராட்டுக்களை குவிந்த அந்த படம் ஓடிடியில் வெளியானது. ரஜினிகாந்தின் வேட்டையன் படம் தான் ஞானவேலுக்கு முதல் பாக்ஸ் ஆபிஸ் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டி யூடியூப் சேனலில் டிரெண்டாகி வருகிறது.

ஹண்டர் பாட்டுடன் அனிருத் வந்தார்: வேட்டையன் படத்தின் டீசர் தாறுமாறாக இருந்த அளவுக்கு படத்தின் டிரெய்லர் இல்லையே என்கிற விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், அதற்கு பதிலளித்த ஞானவேல் அனிருத் ஹண்டர் வண்டார் பாடலுடன் டிரெய்லர் கட்ஸ் கொடுக்க வந்துட்டார். நான் தான் இந்த படம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ரசிகர்களை நாம் அதற்காக தயார் படுத்த வேண்டும். படத்தை ரசிகர்கள் காண வர காரணமே அந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை தாண்டி ஒரு நல்ல கதை இருக்கும் என்பதால் தான். அதனால் இப்படி போவோம் என்றேன் என ஞானவேல் வேட்டையன் டிரெய்லரில் அனிருத் அடக்கி வாசிக்க காரணமே தான் என்பதை கூறியுள்ளார்.

நின்னு பேசும்: ஜெய்பீம் படத்தை போலவே இந்த படமும் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படமாக இருக்கும் என்பதால் பாக்ஸ் ஆபிஸில் நின்னு பேசும் என ரசிகர்கள் வேட்டையன் படத்தின் இயக்குநர் ஞானவேல் பேட்டியை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். ஓபனிங் பெரிதாக இல்லை என்றாலும் படம் வெளியான பின்னர் லாங் ரன் ஓடி மிகப்பெரிய வசூல் வேட்டையை வேட்டையன் திரைப்படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி vs அமிதாப்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் திரையில் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் வேறலெவல் அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்றும் ஞானவேல் உறுதியளித்துள்ளார். வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள வேட்டையன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் சூடு பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X