”என்னடி முனியம்மா” புகழ் டி.கே.எஸ் நடராஜன் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்

சென்னை: "என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடல் மூலம் பிரபலமான பழம்பெரும் பாடகரும் நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 87.

Recommended Video

என்னடி முனியம்மா புகழ் T.K.S.Natarajan காலமானார் | Vaathiyar, Rathapasam | Filmibeat Tamil

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகி வருகின்றனர்.

இந்நிலையில், பழம்பெரும் நடிகரான டி.கே.எஸ். நடராஜன் மறைவு சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

டி.கே.எஸ். நடராஜன் காலமானார்

டி.கே.எஸ். நடராஜன் காலமானார்

1954ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் டி.கே.எஸ். நடராஜன். ஏகப்பட்ட நாட்டுப்புற பாடல்களையும் பாடி பிரபலமானவர். வயது மூப்பு காரணமாக இன்று காலை 6.30 மணிக்கு டி.கே.எஸ். நடராஜன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 87.

500 படங்கள்

500 படங்கள்

ரத்த பாசம் படத்தில் அறிமுகமான டி.கே.எஸ். நடராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார்.

என்னடி முனியம்மா

என்னடி முனியம்மா

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இசையில் வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் இடம்பெற்ற "என்னடி முனியம்மா" பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டி.கே.எஸ். நடராஜன். மேலும், 2006ம் ஆண்டு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் அந்த பாடல் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், டி.கே.எஸ். நடராஜனையும் அந்த பாடலில் ஆட வைத்திருந்தனர்.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

பாடகராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் பணியாற்றி வந்த டி.கே.எஸ். நடராஜன் வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்திய நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: tks natarajan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X