twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “முத்தைத்தரு பக்தித் திரு நகை“ .. சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர்.. டி.எம்.எஸ். நினைவு தினம் இன்று !

    |

    சென்னை : "முத்தைத்தரு பக்தித் திரு நகை" என்ற சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர் டி.எம்.எஸ் அவர்கள். இவர் பாடிய பக்தி பாடலை கேட்டு மனம் உருகாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    60 ஆண்டுகால இசைப் பயணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி, மெல்லிசைப் பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளார்.

    தன் பாடல்கள் மூலம் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் டி.எம்.எஸ். இவர் நம்மைவிட்டு சென்று இன்றோடு 7-வது ஆண்டு. அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் நம்ம விட்டு மறையவில்லை.

    'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் அந்த நடிகையாமே? தீயாய் பரவும் தகவல்!'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் அந்த நடிகையாமே? தீயாய் பரவும் தகவல்!

     பாடல்கள் மீது விருப்பம்

    பாடல்கள் மீது விருப்பம்

    ‘டிஎம்எஸ்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜன். தமிழ் திரையுலகில் இவரது பங்கானது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவரின் இயற்பெயர் தொகுளுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் ஆகும். சிறுவயது முதலே பக்தி பாடல்கள் பாடுவதில் இவர் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். பள்ளி இறுதிப் படிப்பு வரையிலும் பயின்ற இவர் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று, கச்சேரிகள் செய்தார். எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடைகளில் அவரைப் போலவே பாடினார்.

     முதல் வாய்ப்பு

    முதல் வாய்ப்பு

    ஆரம்ப காலகட்டத்தில் இவரது குரல் உடைந்துள்ளது பாடல்கள் சரியாக பாட வரவில்லை என பலராலும் இவர் நிராகரிக்கபட்டவர். ஜி.ராமநாதன் இசையில் மந்திரி குமாரி என்ற படத்தில் முதன் முதலில் பாடகராக அறிமுகம் ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நன்கு பேசக்கூடியவர். அனைத்து மொழிகளிலும் பாடல்களையும் பாடியுள்ளார்.

     5 தலைமுறை பாடகர்

    5 தலைமுறை பாடகர்

    தமிழகத்தில் 1960 மற்றும் 70களில் இவர் பாட்டுக்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம் எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ், ஜெமினி கணேசன், என் டி ராமராவ், எஸ் எஸ் ஆர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட அனைவருக்கும் பாடி 5 தலைமுறை பின்னணிப் பாடகர் என்ற பெருமை பெற்றார். அந்தந்த நடிகருக்கேற்ப குரலை மாற்றிப் பாடும் ஆற்றல் பெற்றவர்.

     நடிப்பிலும் அசத்தினார்

    நடிப்பிலும் அசத்தினார்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். பட்டிணத்தார், அருணகிரிநாதர், அகத்தியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அருணகிரிநாதர் திரைப்படத்தில் அவர் அருணகிரிநாதராகவே வாழ்ந்திருப்பார். பாடலில் மட்டுமல்ல நடிப்பிலும் சிறந்து விளங்கினார் என்பதற்கு இந்த அருணகிரிநாதர் கதாபாத்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

     மனதை வருடும் குரல்

    மனதை வருடும் குரல்

    முத்தைத்தரு பக்தித் திரு நகை, உள்ளம் உருகுதையா, அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற பக்தி பாடல்களுக்கு உருகாத முருக பக்தர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். பக்தி பாடல்கள் மட்டுமல்ல திரைப்பாடல்களையும் தனது மந்திரக்குரலால் மயக்கினார். பாலக்காட்டு பக்கத்துல அப்பாவி ராஜா, சட்டி சுட்டதடா, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, பேசுவது கிளியா, நான் மலரோடு தனியா என இன்னும் எத்தனையோ பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். பக்தி, காதல், சோகம், தத்துவம் என எந்த பாடல்களை கேட்டலும் மனதை வருடும் இவரது மாயக்குரல்.

     இசை சக்கரவர்த்தி

    இசை சக்கரவர்த்தி

    பத்மஸ்ரீ, கலைமாமணி, பேரவைச்செம்மல், குரல் அரசர், இசை சக்கரவர்த்தி போன்ற ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மிக சிறப்பாக ஹார்மோனியம் வாசிக்கும் வல்லமை கொண்டவர் . 2002-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

     நினைவு தினம்

    நினைவு தினம்

    கம்பீரமான குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்ட டிஎம்எஸ், தனது 91வது வயதில் இதே நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் நம்ம விட்டு மறைவதில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவரது பாடல்கள் மூலம் இவர் நம் நெஞ்சில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.

    English summary
    TM Soundararajan legend memorial day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X