விஸ்வரூபம்.. தமுமுக, தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம், முஸ்லீம்களுக்கு அவசர அழைப்பு

By Sudha

சென்னை: விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களையும், திருக்குரானையும் இழிவுபடுத்தி சித்திரித்திருப்பதால் இப்படத்தை வெளியிட விட மாட்டோம். தடுத்து நிறுத்துவோம் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் எச்சரித்துள்ளன. மேலும் இதுதொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் அவை அழைப்பு விடுத்துள்ளன.

விஸ்வரூபம் படத்திற்கு ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இருப்பினும் இப்படம் இஸ்லாமியர்களைப் பெருமைப்படுத்துவதாகவே அமையும் என்று கமல்ஹாசன் கூறி வருகிறார்.

இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினருக்கு இப்படம் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்த்த இஸ்லாயமிய அமைப்பினர் படம் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தமுமுக தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:

முஸ்லீ்ம்களை கொச்சைப்படுத்தியுள்ளார்

முஸ்லீ்ம்களை கொச்சைப்படுத்தியுள்ளார்

நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்?

தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்?

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன், தீவிரவாதிகளின் கையேடு என்பதைப் போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன என்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

கோவை, மதுரை தீவிரவாதிகளின் புகலிடமா?

கோவை, மதுரை தீவிரவாதிகளின் புகலிடமா?

இந்தியத் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களெல்லாம் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடங்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க சூழல் சீர்கெடும்

நல்லிணக்க சூழல் சீர்கெடும்

தமிழகத்தில் மாமா, மச்சான் உறவு முறைப் பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்கவல்லது ‘விஸ்வரூபம்' திரைப்படம்.

முற்போக்கு பிராமணன் ஆபத்தானவன்

முற்போக்கு பிராமணன் ஆபத்தானவன்

‘வைதீக பிராமணனை விட, முற்போக்கு பிராமணன் மிகவும் ஆபத்தானவன்' என்று சொன்ன ஐயா பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது.

தடை செய்ய வேண்டும்

தடை செய்ய வேண்டும்

இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தமுமுக உள்ளிட்ட முஸ்லிம்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இஸ்லாமை இதுவரை இப்படி யாரும் கேவலப்படுத்தியதில்லை

இஸ்லாமை இதுவரை இப்படி யாரும் கேவலப்படுத்தியதில்லை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூறுகையில், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கு சீர்கெடும்

சட்டம் ஒழுங்கு சீர்கெடும்

எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.

வெளியிட விட மாட்டோம்

வெளியிட விட மாட்டோம்

அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X