twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அறுபது ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான பாடல்கள்... டிஎம்எஸ்ஸின் சாதனை!

    By Shankar
    |

    சென்னை: இந்திய திரையுலகில் அறுபது ஆண்டுகள் பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடி, இணையற்ற பாடகராகத் திகழ்ந்தவர் டிஎம் சவுந்திரராஜன். இன்று அவர் தனது 91 வயதில் மரணத்தைத் தழுவினாலும், சினிமா உள்ளவரை ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாகக் குடியிருக்கும் கலைஞனாகத் திகழ்கிறார்.

    சவுராஷ்ட்ரா என்ற சமூகத்தில் பிறந்த டிஎம் சவுந்திரராஜன் மிகுந்த சிரமப்பட்டுதான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

    பழம்பெரும் இயக்குநர் சுந்தர்லால் நட்கர்னி வீட்டில் 6 மாதம் வேலைக்காரனாக இருந்துதான் சினிமா தொடர்புகளைப் பிடித்தார் டிஎம்எஸ். சுந்தர்லால் நட்கர்னிதான் டிஎம்எஸ்ஸுக்கு ஒரு வாய்ப்பு தருமாறு அன்றைய இசையுலக ஜாம்பவான் எஸ்எம் சுப்பையா நாயுடுவுக்கு சிபாரிசு செய்தாராம்.

    அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் நடித்த கிருஷ்ண விஜயம் படத்தில் டிஎம்எஸ்ஸுக்கு முதல் பாடல் வாய்ப்பைத் தந்தார் சுப்பையா நாயுடு. ராதே என்னைவிட்டு ஓடாதேடி என்ற அந்தப் பாடலைப் பாட, டிஎம் சவுந்திரராஜனுக்கு அன்றைக்கு தரப்பட்ட சம்பளம் ரூ 625. அந்த ஆண்டே எம்ஜிஆரின் மந்திரி குமாரி படத்தில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பைத் தந்தார் ஜி ராமநாதன்.

    அடுத்தடுத்து சில பாடல் வாய்ப்புகள் வந்தன. பாவேந்தர் பாரதிதாசன் பாடலைப் பாடும் வாய்ப்பு கூட கிடைத்தது டிஎம்எஸ்ஸுக்கு. ஆனால் பெரிய அளவில் வரமுடியவில்லை.

    சிவாஜிக்கு...

    சிவாஜிக்கு...

    1954 டிஎம்எஸ்ஸுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தூக்குத் தூக்கி படத்தில் சிவாஜி கணேசனுக்குப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலை அப்படியே நகலெடுத்த மாதிரி டிஎம்எஸ் பாட, அன்றிலிருந்து அவர்களின் இணை தொடர்ந்தது. அந்தப் படத்தின் எல்லா பாடல்களும் ஹிட்டாக, டிஎம்எஸ் தமிழ் சினிமாவின் சிகரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

    எம்ஜிஆருடன்

    எம்ஜிஆருடன்

    மக்கள் திலகம் எம்ஜிஆருக்காக டிஎம்எஸ் பாடிய முதல் பாடல் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... அதில் எம்ஜிஆரே திரையில் பாடுவது போல அத்தனை இயல்பாக குரல் வித்தை காட்டியிருந்தார் டிஎம் சவுந்திரராஜன். அன்றிலிருந்து எம்ஜிஆரின் ஆஸ்தான பாடகரானார். எம்ஜிஆர் திரையுலகிலிருந்து விலகிய 1977-ம் ஆண்டுவரை தொடர்ந்து அவருக்கு பாடி வந்தார் டிஎம்எஸ்.

    ரஜினிக்கும்...

    ரஜினிக்கும்...

    எம்ஜிஆர், சிவாஜி மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் வளர்ந்து வந்த ஜெமினி, ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், எஸ்எஸ்ஆர் என பல கலைஞர்களுக்கு டிஎம்எஸ் குரல் கொடுத்தார்.

    அடுத்த தலைமுறை நாயகரான ரஜினிக்கு பைரவியில் நண்டூருது.. என்ற பாடலைத்தான் முதலில் பாடினார். தொடர்ந்து பல படங்களில் ரஜினிக்கு பாடியுள்ளார் டிஎம் சவுந்திரராஜன்.

    ராசியில்லா ராஜா...

    ராசியில்லா ராஜா...

    டி ராஜேந்தரின் ஒருதலை ராகம், ரயில் பயணங்களில் போன்ற படங்களிலும் டிஎம்எஸ் அதிக பாடல்களைப் பாடினார். ஆனால் அதன் பிறகு டிஎம் சவுந்திரராஜன் பாடுவது குறைந்தது. காரணம், புதிய பாடகர்களின் வருகை மற்றும் இளம் நடிகர்களின் விருப்பம் போன்றவைதான்.

    கச்சேரிகள்...

    கச்சேரிகள்...

    அவ்வப்போது மேடைக் கச்சேரிகள் செய்து வந்த டிஎம்எஸ் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் மலேசியாவுக்குத்தான். பின்னர் பல நாடுகளில் கச்சேரி செய்துள்ளார்.

    ஏஆர் ரஹ்மான் இசையில்

    ஏஆர் ரஹ்மான் இசையில்

    கடைசியாக அவர் பாடியது ஏ ஆர் ரஹ்மான் இசையில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடல்தான். அதன் பிறகு எம்எஸ் விஸ்வநாதன் - டிகே ராமமூர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் ஒரு பாடலைப் பாடினார்.

    இசையமைப்பாளர்கள்...

    இசையமைப்பாளர்கள்...

    தென்னிந்தியாவின் ஏறத்தாழ அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமைக்குரியவர் டிஎம்எஸ். அதேபோல ஏராளமான பாடகர்களுடனும் இணைந்து பல்லாயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில், ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு டிஎம்எஸ் குரல் கொடுத்தார்.

    Read more about: tm soundararajan
    English summary
    TM Soundarrajan was a playback singer in the Tamil film industry for over six decades and gave his voice to a galaxy of actors and thespians in the South Indian film industry such as M. G. Ramachandran, Sivaji Ganesan, N. T. Rama Rao and Rajkumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X