TN 2026 Day 1 Box Office - TN 2026 முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?.. பாக்ஸ் ஆஃபிஸில் செம அடி

சென்னை: தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் TN 2026. நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் இப்பட்த்தில் நடித்திருக்கிறார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். நேற்று இப்படமானது வெளியானது. இந்நிலையில் அப்படம் முதல் நாளில் செய்திருக்கும் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வருகின்றன. படம் ரொம்பவே அடி வாங்கியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக பயணத்தை தொடங்கி இப்போது நடிகராக அசத்துபவர் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதியும் திரைத்துறையில் எப்படியாவது தந்தையின் தொடர்ச்சியாக புகழோடு இருக்க வேண்டும் என உழைக்கிறார். ராஜாக்கிளி உள்ளிட்ட படங்களை இயக்கி சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு இதுவரை பெரிய புகழ் வெளிச்சம் எதுவும் கிடைக்காமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் தம்பி ராமையா கதை வசனத்தில் TN 2026 என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

TN 2026 Day 1 Box Office Natty Nataraj Film Opens Very Low at 21 Lakh
Photo Credit:

நேற்று படம் ரிலீஸ்: இப்படத்தில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க; அவருடன் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது இதில் விஜய்யை கலாய்த்துவிட்டார்கள் என்று பலருமே கொதித்தார்கள். ஆனால் படத்தில் அப்படி எதுவும் இல்லை நீங்கள் படத்தை பார்த்தால் புரியும் என ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் கூறியிருந்தார்கள் படக்குழுவினர். மேலும் தேர்தல் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடரப்பட்டது. நல்வாய்ப்பாக படத்துக்கு தடை எதுவும் போடப்படவில்லை. நேற்று திட்டமிட்டபடி படமானது திரையரங்குகளில் ரிலீஸானது.

எப்படி இருக்கிறது தங்க நட்சத்திரம்?: தமிழ்நாட்டில் பெரிய ஹீரோ ஒருவர் அரசியலுக்கு வர நினைப்பதும்; அதை வைத்து செய்யும் தகிடுதத்தங்கள், அவர் சந்திக்கும் விளைவுகள் ஆகியவைகள்தான் படத்தின் கருப்பொருள் ஆகும். கதை, வசனத்தில் தம்பி ராமையா தன்னுடைய 100 சதவீத உழைப்பை போட்டிருக்கிறார் என்பது அவுட்புட்டை பார்க்கும்போது தெரிகிறது. அதேபோல் உமாபதியும் தன்னுடைய தந்தை கொடுத்த கதைக்கு தன்னால் முடிந்த அளவுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். அது ஆஹா ஓஹோவென்று இல்லையென்றாலும், மொக்கையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
LIK Day 1 Box Office - எல்ஐகே முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸில் பிரதீப் ரங்கநாதன் கெத்து
LIK Day 1 Box Office - எல்ஐகே முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸில் பிரதீப் ரங்கநாதன் கெத்து

விஜய்யை கிண்டலா?: அதேபோல் படத்தில் விஜய்யை கிண்டல் செய்திருப்பார் என்றுதான் நினைத்து தியேட்டருக்கு பலர் போனார்கள். ஆனால் விஜய்யை மட்டுமில்லை ரஜினிகாந்த், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோரையும் செமத்தியாக கிண்டலடித்தார்கள். அதேசமயம் விஜய் போன்ற பெரிய ஹீரோக்கள் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கும்படியான காட்சிகளும், அவர்களை உற்சாகப்படுத்துவது மாதிரியான காட்சிகளும் இருக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் நிம்மதியடைந்திருக்கிறார். திரைக்கதை மற்றும் சில விஷயங்களில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகியிருக்கும். இவை அனைத்தையும் தாண்டி தைரியமாக இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு அவர்களை கண்டிப்பாக பாராட்டலாம்.

வசூல் எவ்வளவு?: அதேசமயம் இப்போதும் படம் ஒன்றும் அவ்வளவு மொக்கை இல்லை என்பது பல ரசிகர்களின் நிலைப்பாடு. இந்நிலையில் அந்தப் படம் முதல் நாளான நேற்று செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று இப்படம் தமிழ்நாட்டில் வெறும் 23 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இது ரொம்ப ரொம்ப குறைவான வசூல் ஆகும். அதேசமயம் படத்துக்கு கொஞ்சம் பாசிட்டிவ் டாக்ஸும் வர ஆரம்பித்திருப்பதால் இன்றிலிருந்து கண்டிப்பாக கலெக்ஷன் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கையோடு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X